வயிற்றுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் பொள்ளாச்சியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த, 15 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவரது தந்தை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இந்த சிறுமி தாயின் அரவணைப்பில் வசித்து வருகிறார்.

இப்படியான சூழ்நிலையில், இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக,
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், இந்த சிறுமி தனது தாயாருடன் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தான், சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனால், வலி தாங்க முடியாமல் தவித்த அந்த 15 வயது சிறுமியை, அவரது தாயார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார்.

சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டுப்பிடித்தனர். இது குறித்து, சிறுமியின் தாயாரிடம் மருத்துவர்கள்
கூறியுள்ளனர்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், சிறுமியிடம் “என்ன நடந்தது?” என்று விசாரித்து உள்ளார்.

இதனால், வேறு வழியின்றி சிறுமியும் தனது தாயாரிடம் உண்மையை கூறி உள்ளார். அதன் படி, சிறுமியின் வீட்டின் அருகே உள்ள 49 வயதான குருசாமி என்ற மாற்றுத்திறனாளி தான், சிறுமியை ஏமாற்றியும், கட்டாயப்படுத்தியும் பாலியல் பலாத்காரம் செய்தார்” என்று, சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு சிறுமியின் தாயார் இன்னும் அதிர்ச்சியடைந்து உள்ளார்.

இந்த சூழ்நிலையில் தான, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது.

இதையடுத்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் சார்பில், பொள்ளாச்சி மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியிடமும், அவரது தாயாரிடமும் தீவிரமாக விசாரித்து உள்ளனர்.

விசாரணையில், சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், “சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மாற்றுத்திறனாளி குருசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார், அவரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவருக்கு பிறந்த ஆண் குழந்தையை நீதிமன்றம் மூலம் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கும் முயற்சிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.