டி20 உலகக் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டு உள்ள நிலையில், இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோத உள்ளது உலக கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் எப்போது நடைபெற்றாலும், அது உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்திருக்கும்.
அதுவும், கிரிக்கெட் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் திகழ்ந்து வருகின்றன.
அத்துடன், இரு நாட்டு அரசுகளுக்கிடையே சுமூக உறவு இல்லாததால், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே, அது தனி சுவாரஸ்யமாகவே அமையும்.
அந்த வகையில், இந்த 2022 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி தற்போது வெளியிட்டு உள்ளது.
அதில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் இந்தியா உள்பட 12 அணிகள் நேரடியாக குரூப் சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளன. அந்த வகையில், எஞ்சி உள்ள 4 அணிகள், தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்று குரூப் சுற்றுக்குள் நுழைய இருக்கின்றன.
அதன்படி, “ஐஐசி 20 டி உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டு உள்ள நிலையில். இந்த குரூப் சுற்றுக்குள் நுழைவதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கும்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் பிறகு, “அக்டோபர் 22 ஆம் தேதி சனிக் கிழமை அன்று, டி20 உலகக் கோப்பையின் லீக் சுற்றுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கும்” என்றும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
“இந்த லீக் சுற்றின் முதல் போட்டியில், நியூசிலாந்து அணியை நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி எதிர்கொண்டு” மோதுகிறது.
அதே நேரத்தில், “இந்திய அணியானது, தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் உடன் மோதுகிறது.
அந்த வகையில், இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பெர்ன் எம்சிஜி ஸ்டேடியத்தில் நடைபெற” உள்ளன.
மேலம், “இந்த டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியானது நவம்பர் 13 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மெல்பெர்ன் எம்சிஜி ஸ்டேடியத்தில் நடைபெறும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஆண்டு பாகிஸ்தானிடம், இந்திய அணி படுதோல்வி அடைந்தது, ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் கடும் அதிர்ச்சியடைய செய்த நிலையில், அதன் தொடர்ச்சியாக, தற்போது மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது உலக கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.