#IPL2022 இறுதிப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட #RR ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, #GTகுஜராத் அணி அசத்தல் வெற்றியை பெற்று, கோப்பையையும் கைபற்றி உள்ளது.

#IPL2022 சீசன் தொடங்கியதிலிருந்தே யாரும் எதிர்பார்க்காத வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.

அதில் முக்கியமான ஒன்று, #GT குஜராத் டைட்டன்ஸ் தான் அறிமுகம் ஆன முதல் சீசனிலேயே அந்த அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது தான், பெரும் வியப்பபை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த #RR ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு வெறும் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதில், ஜாஸ் பட்லர் அதிக பட்சமாக 35 பந்துகளுக்கு 5 பவுண்டரி உட்பட 39 ரன்கள் எடுத்தார். அதே போல், மற்ற வீரர்களான ஜெய்ஸ்வால் 22, பராக் 15, சஞ்சு சாம்சன் 14, ஹெட்மயர், போல்ட் தலா 11 ரன் எடுத்தனர் என்று சொற்ப ரன்களில் வெக்கெட்டுக்களை பறிக்கொடுத்து #GT குஜராத் அணியிடம் சரணடைந்தனர்.

இதில், #GT குஜராத் அணியின் சார்பில் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டிய பந்து வீச்சில் அசத்திய நிலையில் 4 ஓவர்கள் வீசி வெறும் 17 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தார்.

பின்னர், 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய #GT குஜராத் அணியின் ஓப்பனரான விருதிமான் சாஹா வெறும் 5 ரன்களுக்கு வெளியேற, பின்னர் வந்த மேத்யூவ் வெட் 8 ரன்களுக்கு அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

இதனால், #GT குஜராத் அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தட்டு தடுமாறிப்போனது, அப்போது களத்திற்கு வந்த #GT அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 34 ரன்களை அதிரடியாக விளாச, சுப்மன் கில் 45 ரன்கள் விளாச ரன் வேகம் உயர்ந்தது.

இறுதியாக, களமிறங்கிய டேவிட் மில்லர் 19 பந்துகளில் 32 ரன்களை அதிரடியாக விளாச #GT குஜராத் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 133 ரன்களை மிக எளிதான எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றதுடன், இந்த #IPL2022 15 வது சீசனில் #IPL சாம்பியன் பட்டத்தை வென்று தான் அறிமுகம் ஆன முதல் சீசனிலேயே #GT குஜராத் அணி சாதித்துக் காட்டி உள்ளது.

இதனால், கிட்டதட்ட 13 வருடங்களுக்கு பிறகு “#IPLகோப்பை வெல்ல வேண்டும்” என்கிற, #RR ராஜஸ்தான் அணியின் கனவு தகர்ந்து போனது.

#RR ராஜஸ்தான் தோல்விக்கு 5 காரணங்கள்!

- #RR ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது டாஸ் மட்டுமே. இந்த போட்டியில் டாஸ் வென்ற #RR முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது, மிகப் பெரிய தவறு என்றும், அனைத்து தரப்பினரும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

- #RR அணியின் பட்லருக்கு, #GT குஜராத் அணியை விட சொந்த அணி வீரர்களே கூடுதல் நெருக்கடி கொடுத்தனர். அதாவது, #RR அணி வீரர்கள் யாரும் பட்லருக்கு ஈடுகொடுத்து, அவருடன் ஜோடி சேர்ந்து ஆடவில்லை. இதனால், #RR ராஜஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுக்களை இழந்ததால், பட்லருக்கு சுதந்திரமாக ஆட முடியாத நிலை ஏற்பட்டதுடன், அவருக்கு சற்று கூடுதலான நெருக்கடி ஏற்பட்டதாலேயே அவர், 35 பந்துகளில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- ரஷித் கான் ஓவரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் #RR வீரர்கள் திணறிப்போனார்கள்.

- #RR வீரர்கள் அடித்தால் பவுண்டரி அல்லது சிக்ஸர் என்றும், இல்லை என்றால் டாட் பந்து என்ற திட்டமிட்டது போல் விளையாடியதால் தான் அவர்களால் ரன்களை சேர்க்க முடியவில்லை என்றும், இதனால் அந்த வீரர்கள் சிங்கிள்ஸ் எடுக்க தவறினார்கள் என்றும் கூறப்படுகிறது.

- #RR வீரர்கள் தொடக்கம் முதலே 180, 190, 200 ரன்களை அடிக்க வேண்டும் என்ற நோகத்துடன் விளையாடியதால் விக்கெட்டுக்களை இழந்து, 130 ரன்களுக்குள்ளாகவே சுருண்டு போனாார்கள்.

#GT குஜராத்தின் வெற்றிக்கு சில காரணங்கள்!

- ரஷித் கானின் 4 ஓவரில் #RR ராஜஸ்தான் வீரர்கள் வெறும் 18 ரன்கள் மட்டுமே அடித்தனர்.

- ஹர்திக் பாண்டியாவின் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகளை இழந்தனர்.

- #RR பவுலர்களான டிரெண்ட் பவுல்ட், சாஹல் பந்துகளை மட்டும் நிதானமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும், மற்ற பந்து வீச்சாளர்களை போட்டு தாக்க வேண்டும் என்கிற #GT குஜராத் அணியின் திட்டம் இந்த முறை சூப்பராகவே ஒர்க்கவுட் ஆனது.

- இந்த போட்டியில், அஸ்வின், பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சை எதிர் அணியினல் தும்சம் செய்தனர்.

- குஜராத் அணி வீரர்கள் யாருமே துளியும் நெருக்கடி இல்லாமல் விளையாடினர்.