ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்றைய 15 ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றிபெற்றது.
15 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை டி.ஒய் பட்டீல் மைதானத்தில் நேற்றிரவு நடந்த 21-வது லீக் ஆட்ட தொடரின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார். இதனையடுத்து, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்திவ் வெய்ட், சுப்மன் கில் களமிறங்கினர். வெய்ட் 19 ரன்னிலும், கில் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
மேலும் அடுத்துவந்த சாய் சுதர்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அரைசதம் அடித்தார். அபினவ் மனோகர் 35 ரன்கள் எடுத்தார். இறுதியில், குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் வில்லியம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர்.
அதனைத்தொடர்ந்து வந்த இரு வீரர்களும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 32 பந்துகளை சந்தித்த அபிஷேக் 6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்துவந்த திரிபாதி 17 ரன் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக ரிட்டெய்ட் முறையில் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய கேப்டன் வில்லியம்சன் 46 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 57 ரன்கள் குவித்தார். இறுதியில் சன்ரைசர்ஸ் 19.1 ஓவரில் 168 ரன்கள் குவித்தது. இதன் மூலம் குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றிபெற்றது.
அதாவது நிகோலஸ் பூரன் 18 பந்துகளில் 34 ரன்களுடனும், மார்க்ரம் 8 பந்துகளில் 12 ரன்களுடனும் இறுதி வரை களத்தில் இருந்து ஐதாரபாத் வெற்றிக்கு வழிவகுத்தினர். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் ஐதராபாத் அணி 8-வது இடத்தில் உள்ளது. இப்போட்டியில் தோல்வியடைந்த போதிலும் 4 போட்டிகளில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் குஜராத் புள்ளிபட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.