#IPL2022 நேற்று நடைபெற்ற #MI vs #KKR அணிகளுக்கு இடையிலான போட்டியில் 10 பந்தில் #MI மும்பையை முடித்துக்காட்டிய பேட் கம்மின்ஸ், 14 பந்துகளில் அதிவேக அரைசதத்தை அடித்து நொறுக்கியதால், #KKR எளிதாகவே வெற்றிப் பெற்றது.
#IPL2022 நேற்று நடைபெற்ற 14 வது லீக் போட்டியில், #MI vs #KKR அணிகள் மோதின. இரு அணிகளுமே சம பலம் பொருந்திய அணிகள் என்பதால், நேற்றைய போட்டியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த போட்டியில், டாஸ் வென்ற #KKR கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, #MI மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில், அந்த அணியில் யாரும் அதிரடியாக விளையாடத நிலையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதில், #MI மும்பை அணியில் கடைசி நேரத்தில் களமிரங்கிய பொல்லார்ட், 5 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அசத்தினார்.
பின்னர், 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ரகானே 7, ஸ்ரேயாஸ் ஐயர் 10, சாம் பில்லிங்ஸ் 17, நிதிஷ் ராணா 8, ஆண்ட்ரே ரஸல் 11 என்று, பல வீரர்களும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
அதே நேரத்தில், ஓப்பனிங் இறங்கி எதிர் முனையில் அணியின் தூணாக நின்ற வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் 50 ரன்களை அடித்து அசத்தினார்.
அப்போது, கடைசி 37 பந்துகளில் 61 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அப்போது களமிறங்கிய பேட் கம்மின்ஸ், வந்த வேகத்தில் பட்டாசாக வெடித்து சிதற அடுத்தடுத்து சிக்ஸர்களாக பறக்கவிட்டார்.
இதனால், #MI மும்பை அணி என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பிதுங்கி நின்றனர்.
அதுவும், அந்த நேரத்தில் சாம்ஸ் வீசிய 16 ஓவரில் மட்டும் 6, 4, 6, 6, N2, 4, 6 என துளியும் இரக்கமே காட்டாமல், பொளந்து கட்டினார் பேட் கம்மின்ஸ். இந்த ஓவரில் மொத்தமாக 35 ரன்களைவாண வேடிக்கை காட்டி தெறிக்கவிட்டு அசத்தினார்.
இதனால், முதல் 10 பந்தில் ஆட்டத்தையே #KKR பக்கம் கொண்டு வந்து காட்டினார். மொத்தமாக, 14 பந்துகளில் அதிவேக அரைசதத்தை இந்த #IPL2022 வரலாற்றில் பதிவு செய்து, கே.எல். ராகுலோடு தனது இந்த சாதனையை பங்கு போட்டுக்கொண்டார் பேட் கம்மின்ஸ்.
இதன் காணரமாக, கொல்கத்தா அணி 16 ஓவர்களில் எல்லாம் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை சேர்த்து அபார வெற்றி பெற்றது.
இதனால், #MI ஹாட்ரிக் தோல்வி தழுவி உள்ளதால், ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
“விராட் கோலியைப் போல், கேப்டன் பதவியால் ஏற்படும் சுமை காரணமாக, ரோகித் சர்மாவால் முன்பு போல் தற்போது பேட்டிங்கில் ஜொலிக்க முடியவில்லை” என்கிற விமர்சனமும் எழுந்து உள்ளது.
குறிப்பாக, “ரோகித் சர்மாவுக்கு வயதும் 34 ஆகி விட்டதால், கேப்டன் பதவியை அவர் வேறு யாருக்காவது விட்டு கொடுத்துவிட்டு இவர் தோனியை போல் சுதந்திரமாக விளையாட வேண்டும்” என்கிற விமர்சனமும் தற்போது எழுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ - டெல்லி அணிகள் மோதி விளையாடுகிறதுர்.