#IPL2022 சீசனில் நேற்று நடைபெற்ற #SRH ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், #KKRகொல்கத்தா அணி அபார வெற்றி பெற்று, ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டு உள்ளது.

#IPL2022 சீசனின் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ப்ளே ஆப் சுற்றும் தற்போது நெருங்கி வருகிறது. அந்த வகையில், இந்த #IPL சீசனில் நேற்று நடைபெற்ற 61 வது லீக் போட்டியில் #SRH vs #KKR அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற #KKR கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன் படி, #KKR அணி சார்பில் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் - ரகானே ஜோடி களமிறங்கினர். அப்போது, வெங்கடேஷ் ஐயர் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்க, களத்திற்கு வந்த நிதிஷ் ராணா, ரஹானேயுடன் ஜோடி சேர்ந்த நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தார்.

இப்படியாக, இருவரும் சற்று அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்த நிலையில், #KKR அணியின் ஸ்கோர் 65 ரன்னாக இருந்தபோது, ராணா 26 ரன்களிலும், ரகானே 28 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

பின்னர் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், ரிங்கு சிங்க் அடுத்தடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்து அதிர்ச்சி அளித்தனர். இதனால், #KKR அணியின் ஸ்கோர் 94 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறி நின்றது.

அத்துடன், ரிங்கு சிங்கிற்கு வீசிய பால், சரியாக பேடில் பட, எல்பிடபுள்யூ கோரி சன்ரைசர்ஸ் வீரர்கள் கூச்சலிட்டனர். அப்போது, ஒரு சில வினாடிகள் யோசித்துவிட்டு, களத்தில் நின்ற நடுவர் பொறுமையாக அவுட் என கொடுத்தார்.

அப்போது, DRS ரிவியூ கோரலாமா என்று ரிங்கு சிங்கும் - பில்லிங்ஸும் பேசிக் கொண்டனர். அதே நேரத்தில் அப்போது DRS கவுண்டன் டவுன் ஓடிக் கொண்டிருந்த நிலையில், இறுதி வினாடி நெருங்கும்போது DRS ரிவியூ கேட்டார் பில்லிங்ஸ்.

ஆனால், “அதற்குள் நேரம் முடிந்துவிட்டதாக” நடுவர் பதில் அளித்ததால் சற்று அதிர்ச்சியடைந்த பில்லிங்ஸ், நடுவருடன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, “சரியான நேரத்தில் நாங்கள் ரிவியூ கேட்டுவிட்டோம்” என்று, வீரர்கள் இருவரும் பதில் அளித்தனர். ஆனால், அங்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு புதிய ட்விஸ்ட் வைத்தார் நடுவர்.

“DRS ரிவியூவை சம்மந்தப்பட்ட வீரரான ரிங்கு சிங் தான் கேட்க வேண்டும் என்றும், ஆனால் அதற்கு மாறாக மறுமுனையில் இருந்த பில்லிங்ஸ் DRS ரிவியூ கேட்டதால், ரிவியூ தர முடியாது” என்றும், நடுவர் கூறியுள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த #KKR வீரர்கள் இருவரும் கடும் அதிர்ச்சியடைந்து, நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால், அந்த மைதானத்தில் சிறிது நேரம் சற்று பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், #SRH கேப்டன் கேன் வில்லியம்சன், அருகில் வந்து கொல்கத்தா வீரர்களிடம் பேசினார். அதன் பிறகே, ரிங்கு சிங் வெளியேறினார்.

இது நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், #KKR கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளரான மெக்கல்லம் மிகவும் ஆவேசமாக 4 வது நடுவரிடம் முறையிட்டார். இதனால், அந்த சில நிமிடங்கள் அந்த மைதானமே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

அப்போது களத்திற்கு வந்த ரசல், சாம் பில்லிங்ஸ் ஜோடி சற்று அதிரடியாக டாப் கியரில் எகிர ரன் வேகமும் கிடுகிடுவென உயர்ந்தது.

இந்த வேகத்தில், சாம் பில்லிங்ஸ் 39 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கடைசி ஓவரில் ரசல் அதிரடியாக 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை நிகழ்த்தினார்.

இதனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு #KKR 177 ரன்களை சேர்த்தது. அப்போது, ரசல் 28 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதனால், 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் #SRH ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கேன் வில்லியம்சன் - ராகுல் திரிபாதி ஜோடி, தலா 9 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

பின்னர், நிகோலஸ் பூரண் 2 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 4 ரன்னிலும் என அடுத்தடுத்து வந்த வீரர்கள் தொடர்ந்து சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறிய வண்ணம் இருந்தனர். எனினும், அபிஷேக் சர்மா மட்டும் 43 ரன்களை சேர்த்தார்.

இதனால், 20 ஓவர்கள் முடிவில் #SRH ஐதராபாத் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 123 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், #KKR கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், #KKR கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது. ஆனால், இந்த போட்டியில் #SRH ஐதராபாத் அணி தோல்வி அடைந்ததால், மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட 14 புள்ளிகள் மட்டுமே வரும் என்பதால், ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து சற்று விலகி உள்ளது என்றே கூறப்படுகிறது. இதனால், ஐதராபாத் அணிக்கு ப்ளே ஆஃப் சுற்றில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.