ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்வா சாவா போராட்டத்தில் களம் காண உள்ளதால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டிகள் கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கி வருகின்றன. இதனால், “சென்னை அணி கோப்பையை வெல்வதைக் காட்டிலும், ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு இருக்கா? இல்லையா?” என்பதே மிகப் பெரிய கேள்வியாக சென்னை ரசிகர் மத்தியில் எழுந்திருக்கும் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை தலா 9 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்வி என்று 6 புள்ளியுடன் சம நிலைமையில் சம பலத்துடன் இருக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரை எஞ்சி உள்ள 5 ஆட்டங்களிலும் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்த 5 போட்டியிலும் வெற்றிப் பெற்றால் தான், அடுத்த சுற்றான பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நுழைய முடியும். ஆனால், இப்போது உள்ள சென்னை அணியை பொருத்தமட்டில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்துமே சொதப்பி வருவதால், அவர்கள் இந்த வருட பிளே ஆஃப் சுற்றுக்கு
முன்னேறிச் செல்வதில் சிரமம் இருக்கும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணித்து உள்ளனர். அந்த வகையில், இன்று நடைபெற உள்ள போட்டியானது, இரு அணிக்குமே இது வாழ்வா? சாவா? போர் மாதிரியாகத்தான் இருக்கப் போகிறது.
அதே நேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் பங்கேற்ற எல்லா ஐபிஎல் தொடரிலும் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த ஒரே அணியாகப் பெருமையோடு திகழ்கிறது. ஆனால், இந்த முறை அந்த பெருமையைச் சென்னை சூப்பர் கிங்ஸ் இயல்பாகவே இழந்து விடுமோ? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
சென்னை அணியில் டாப் 3 வீரர்கள் பிளிஸ்சிஸ், வாட்சன், அம்பத்தி ராயுடு நன்றாக ஆடுகிறார்கள். ஆனால், மிடில் வரிசை தான் கேப்டன் தோனி முதல் மற்ற அனைத்து வீரர்களும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதில் குறிப்பிட்டு சொன்னால், கேப்டன் தோனி, மிகவும் மோசமான பேட்டிங்கே நடந்து முடிந்த 9 போட்டியில், 136 ரன்கள் பின்னடைவுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே ராஜஸ்தானுக்கு எதிராக 216 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி போதும் கூட சென்னை அணி 200 ரன்கள் எடுத்து நெருங்கி வந்த நிலையில், தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக, இந்த தோல்விக்குப் பழிதீர்த்து மறுபடியும் வெற்றிப்பாதைக்குச் சென்னை திரும்புமா? என்பது சென்னை ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதே போல், இதற்கு முந்தைய ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் போராடி தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் அணியும், தற்போது கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளது. பேட்டிங், பவுலிங்கில் மிகவும் தரமான வீரர்கள் அந்த அணியில் இருந்தும் கூட, தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் அந்த அணி தடுமாறி வருகிறது. முதல் 2 ஆட்டத்தில் ரன்மழை பொழிந்த சஞ்சு சாம்சன் அடுத்த 7 போட்டிகளில் தனது பேட்டிங்கை மறந்து விட்டது போலவே விளையாடு வருகிறார் என்று விமர்சனங்கள் எழுந்து உள்ளன.
அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லரிடம் இருந்து இன்னும் முழுமையான ஆட்டம் வெளிப்படவில்லை. தங்கள் அணியைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்றால் இவர்கள் ரன்வேட்டை நடத்திய ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றனர். முக்கியமாக இரு அணிகளுமே வெற்றி பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தத்துடன் இன்று வரிந்து கட்டுவதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது என்றே கூறப்படுகிறது. இதனால், இன்றைய போட்டி, ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதனால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.