#IPL2020 ஆம் ஆண்டு சீசனில் கூட மிக மோசமாக விளையாடிய சென்னை அணி முதல் போட்டியை வென்றிருந்த நிலையில் கூட, இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடி பிறகும் இது வரை ஒரு வெற்றியை கூட பெறவில்லை என்பது, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிர்களை பெரும் ஏமாற்றம் அடைய செய்து உள்ளது.
#IPL2022 கிரிக்கெட் தொடரின் 15 வது சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு நடைபெற்ற 11 வது லீக் போட்டியில் #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் - #PBKS பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
#CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் மண்ணை கவ்விய நிலையில் தான், எப்படியாவது 2 வது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் லக்னோ அணியுடன் மோதிய நிலையில், #CSK அணியில் சரியான பவுலர்கள் இல்லாமல், மீண்டும் 6 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது.
இப்படியாக, #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 2 தோல்விகளை சந்தித்து, எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சயத்துடனும், #PBKS பஞ்சாப் அணியுடன் நேற்று மோதி விளையாடியது.
இதில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், ஷிகர் தவன் களம் இறங்கினர்.
எடுத்ததும், கேப்டன் மயங்க் அகர்வால் 4 ரன்கள் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய பானுகா ராஜபக்ச 9 ரன்களில் ரன்அவுட் நடையை கட்ட அப்போது களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் - மறுமுனையில் களத்தில் நின்ற ஷிகர் தவன் ஜோடி, #CSK பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். 10 ஓவருக்கு 115 ரன்களை பஞ்சாப் எடுத்திருந்த நிலையில், இந்த போட்டியில் எப்படியும் ஸ்கோர் 200 ரன்களைக் கடந்து செல்லும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
அப்போது, தவன் 24 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த நிலையில் ப்ராவோ பந்துவீச்சில் அவுட்டாகி வேளியேறினாலும், மறுபுறம் சற்றும் குறையாமல் அதிரடியாக விளையாடி லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்தில் அவுட்டானர்.
அதன் தொடர்ச்சியாக களமிறங்கிய #PBKS பஞ்சாப் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதனால், #PBKS ரன் வேகம் சற்று குறைந்தது.
இதனால், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு #PBKS பஞ்சாப் அணியானது 180 ரன்களை சேர்த்தது. சென்னை அணி சார்பில் ஜோர்டன், ப்ரிட்டோரியஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
பின்னர், 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய #CSK சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் கெய்க்வாட் - ராபின் உத்தப்பா களமிறங்கினர்.
அப்போது, ரூத்ராஜ் 1 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி, ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்ட, மறுபுறம் ராபின் உத்தப்பாவும் 13 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய #CSK வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
அதன் படி, அம்பதி ராயுடு 13 ரன்களிலும், கேப்டன் ஜடேஜா டக் அவுட்டாகியும் அதிர்ச்சி அளித்தனர்.
இதனால், #CSK அணியானது 36 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தட்டு தடுமாறிப் போனது. அப்போது வந்த ஷிவம் துபே மட்டும் சற்று ஆறுதல் தரும் வகையில் விளைாயடி 30 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுத்து, ஆட்டமிழந்தார்.
பின்னர், தோனியும் 28 பந்துகளில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.
இதனால், #CSK அணியானது 126 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலமாக, 54 ரன் வித்தியாசத்தில் #CSK அணி ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியது.
இப்படியாக, #CSK விளையாடி முதல் 3 போட்டிகளிலும் வரிசையாக தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் 9 வது இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில், #PBKS பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி ஏன் அடைந்தோம், என்பதற்கான காரணங்களை #CSK சென்னை கேப்டன் ஜடேஜா முன்வைத்து உள்ளார்.
#CSK வின் தோல்வி குறித்து விளக்கி உள்ள கேப்டன் ஜடேஜா, “நாங்கள் பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டோம்” என்று, முதலில் குறிப்பிட்டார்.
அத்துடன், “எங்களது முதல் பந்தில் இருந்தே ஆட்டம் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை என்றும், வலுவாக மீண்டு வர நாங்கள் புதிய வழியை கண்டுபிடிக்க வேண்டியது அவிசயம்” என்றும், கூறினார்.
குறிப்பாக, “ஓபனர் ருதுராஜ் கெய்குவாட் தொடர்ந்து குறைவான ரன்னிலேயே அவுட் ஆவதால், அவர் விளையாடும் திறன் கவலை அளிக்கும் வகையில் உள்ளதா?” என்றும், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த #CSK கேப்டன் ஜடேஜா, “கெய்குவாட் மிகச் சிறந்த வீரர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அவரது ஃபார்ம் குறித்து கவலை இல்லை. அவருக்கு நாம் உத்வேகம் அளிக்க வேண்டும். அவர் மீண்டும் சிறப்பாக செயல்படுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது” என்றும், நாசுக்கவே ஜடேஜா பதில் அளித்தார்.
இதனிடையே, #IPL2022 இந்த சீசனில் முதல் 3 போட்டிகளில் #CSK ஓபனர் ருதுராஜ் கெய்குவாட் அடித்த மொத்த ரன்கள் 2 மட்டுமே. கடந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை குவித்து, ஆரஞ்சு கேப் வின்னராக இருந்த ருதுராஜ், இந்த #IPL2022 சீசனில் கெய்குவாட், தான் விளையாடி முதல் 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது.