ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமோத்த கிரிக்கெட் ரசிர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரபலமான முன்னாள் வீரரான ஷேன் வார்னே, தனது ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக பணியாற்றி வந்தார்.
இவற்றுடன், சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கருத்துகளையும் அவர் பகிர்ந்து வந்தார்.
இவர், ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளிஉல் விளையாடி 708 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். டெஸ்ட் விக்கெட் போட்டியில் இலங்கையின் முத்தையா முரளிதரனுக்கு 800 விக்கெட் எடுத்து முதல் இடத்தில் இருந்தாலும், அவருக்கு அடுத்து 2 வது இடத்தில் வார்ன் தான் இப்போது வரை இருக்கிறார்.
அதுவும், 194 ஒருநாள் போட்டியில் 293 விக்கெட் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஆஸிரேலியா அணியிலும் விளையா இருக்கிறார்.
குறிப்பாக, ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நிலையில் முதல் டி20 தொடரின் முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றதுடன், தொடர் நாயகன் விருதையும் இவர் பெற்று அசத்தினார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, வர்ணனையாளராக செயல்பட்டு வந்த அவர், தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் எப்போதும் தன்னை நினைவுகூர வைத்துக்கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் தான், 52 வயதான கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானான ஷேன் வார்னே, தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் நேற்று திடீரென்று உயிரிழந்தார்.
அதாவது, தாய்லாந்தின் கோஹ் சாமுய் தீவில் தனக்கு சொந்தமான சொகுசு மாளிகையில் ஷேன் வார்னே தங்கியிருந்த நிலையில், நேற்று திடீரென்று மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.
அப்போது, சுயநினைவற்று அவர் மயங்கிய நிலையில் ஷேன் வார்னே இருந்த போது, உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்தும் துரதிர்ஷ்டவசமாக அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
உயிரிழந்த வார்னேவுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இதனிடையே, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு நாயகரான ஷேன் வார்ன், தீடீர் மறைவால் அதிர்ச்சியுற்றேன். மிக விரைவாகப் பிரிந்து சென்றுவிட்டார் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை” என்று, குறிப்பிட்டு உள்ளார்.
“ஓர் உண்மையான விளையாட்டு மேதையை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் கிரிக்கெட் உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும், முதல்வர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்து உள்ளார்.
அதே போல், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி, வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் உள்பட முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.