தமிழகத்தில் 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் தொடங்கியுள்ளது.காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப் பதிவு நாளான இன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் களத்தில் மொத்தம் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர் ஆண்கள், 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேர் பெண்கள். 7,192 பேர் 3-ம் பாலினத்தவர் உள்ளனர்.


மேலும் 80 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்குத் தபால் ஓட்டுக்காக 1 லட்சத்து 4 ஆயிரத்து 282 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. அதில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 202 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30 பேருக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு 28 பேர் தபால் ஓட்டு அளித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் 28 ஆயிரத்து 531 விண்ணப்பங்கள் அளித்து 28 ஆயிரத்து 159 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன.


”முதல் 2 மணி நேரத்தில் 13.80% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 20.23% வாக்குகளும் மற்றும் குறைந்தபட்சமாக நெல்லையில் 9.98% வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் 9 மணி வரை 10.58% வாக்குகளும் பதிவாகியுள்ளது” என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.