தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த மாதம் தேர்தல் பரப்புரையை தொடங்கி உள்ளார். மாவட்டம் தோறும் பிரசாரம் செய்து வரும் அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பர்கூர் பகுதியில் பிரச்சாரத்தில் பேசிய அவர் , ‘ மக்களிடம் கொள்ளை அடிக்கும் கொள்ளையர்களுக்கு ஓட்டு போடுவதை தவிர்க்க வேண்டும். எங்கு பார்த்தாலும் திறந்த வெளி சாக்கடைகளாகவும், குப்பை மேடாகவும் காணப்படும் இப்பகுதி தேர்தலுக்குப் பின் சீரமைக்கப்படும்.

மக்கள் நீதி மய்யம் அறிவித்து இருக்கும் தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான, இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்பட்டும் என்பதை சிலர் கிண்டலடிக்கின்றனர். ஆனால் அது நடந்தே தீரும், அப்போது அதன் பலனை தாய்மார்கள் அனுபவிப்பபார்கள். மேலும் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் சாக்கடைகள் போல் இருக்கிறது. வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை , வேலை தரும் முதலாளியாக மாற்றுவதற்காக முயன்று கொண்டிருக்கிறோம் “ என்று கமல்ஹாசன் பேசினார்.