நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த பேராசிரியர் கல்யாண சுந்தரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் கட்சியிலிருந்து விலகினார். நாம் தமிழர் கட்சியில் இருந்து கல்யான சுந்தரம் விலகியது முதல் திமுகவில் இணைவார் என பேசப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் கல்யாணசுந்தரம்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’ நான் பா.ஜ.கவில் சேரவில்லை. அதிமுகவில் தான் இணைந்து இருக்கிறேன். தமிழகத்திற்கு எதிரான எந்த திட்டங்களையும் செயல்படுத்தாது என்ற நம்பிக்கையில் அதிமுகவில் இணைந்துள்ளேன். எனக்கு திராவிட சித்தாந்தங்களுக்கு எதிரான நிலைப்பாடு இருந்தாலும் அதிமுகவில் தான் அடிமட்ட தொண்டன் கூட உயரத்தில் அமர முடிகிறது.


அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 % உள் ஒதுக்கீடு கொண்டு வர ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் எடப்பாடி உடனே அவசர சட்டத்தை கொண்டு வந்தார்.மறுநாளே ஆளுநர் அனுமதிக்கொடுத்தார்.


ஈழம் நிலைப்பாட்டில் ஜெயலலிதாவுக்கு இருந்த ஆரம்ப காலங்களில் நிலைப்பாடு எதிராக இருந்தாலும் 2011க்கு பிறகு இலங்கையில் நடந்து இனப்படுக்கொலை தான் , பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் திமுக இன்று வரை இனப்படுக்கொலை நடந்தது என்பதை பேச தயாராக இல்லை.


அதிமுக மீது மக்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. ஒருவேளை அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தால் நாடு நல்லா இருக்காது. பாஜகவின் அழுத்தம் அதிமுகாவிற்கு இருக்கிறது என்றால் தமிழகத்தை காப்பாற்ற அதிமுகவை வலுப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்று தானே பொருள் வரும்..?அதிமுகவை வலுப்படுத்த செயல்படுவேன் ” என்று பேசினார்.