சட்ட சபையின் வெளியே நின்றிருந்த உதயநிதி ஸ்டாலின் காரில் எடப்பாடி பழனிசாமி ஏறிச் செல்ல முயன்ற சம்பவம், சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்றம் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இதில் பல்வேறு துறைகளின் கீழ் தமிழக அமைச்சர்கள், பல்வேறு அறிவிப்புகளை அன்றாடம் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக, சட்டப் பேரவை கூட்டத் தொடரானது, கடந்த 6 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சக சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, முதலமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் காலையில் கூட “அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்படும்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைடுத்து, தமிழக சட்டப் பேரவை கூட்டம் முடிந்ததும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முன்னதாக சட்டப் பேரவையில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது, அங்கிருந்த செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் பேட்டி எடுக்க முட்டி மோதிக்கொண்டு இருந்தனர்.
அப்போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சரிவர பதில் அளிக்காமல் அங்கிருந்து செல்வதிலேயே குறியாக இருந்த எடப்பாடி பழனிசாமி,
அந்த இடத்தில் நின்றுக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினின் காரில், தவறுதலாக ஏற முற்பட்டு உள்ளார்.
அப்போது, அங்கு நின்றிந்த சக பாதுகாவலர்கள், எடப்பாடி பழனிசாமியை தடுத்து நிறுத்தி,“உங்களது வாகனம் அருகில் இருக்கிறது” என்று கூறி உள்ளனர்.
இதனால், பதற்றித்தில் அங்கிருந்த பாதுகாவலர்களிடம் “ஓ, சாரி சாரி..” என்று, சொல்லிக்கொண்டு சிரித்தபடியே அங்கிருந்து, அவரடைய காருக்கு சென்று, அதில் ஏறிச் சென்றார்.
குறிப்பாக, அந்த நேரத்தில், சசிகலா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தனது காரில் ஏறி உடனடியாக புறப்பட்டுச் சென்றார்.