ஆரோக்கியமான முறையில் சீராக உடல் எடையை குறைப்பது தான் பக்க விளைவுகள் இல்லாதது. மரபியல், பழக்கவழக்கங்கள், வளர்சிதை மாற்றம் மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (Body Mass Index) ஆகியவையே உடல் எடையை தீர்மானிக்கிறது. சீரான உடல் எடை பராமரிப்பதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். இதனுடன் உடற்பயிற்சியையும் முறையாக செய்ய வேண்டும். எடையை குறைக்க சில ஸ்மார்ட்டான சத்தான டிப்ஸ்கள் இதோ.


ஹாட் வாட்டர்
உணவுக்கு பிறகு சூட்டான தண்ணீர் குடிப்பதால் கொழுப்புகள் சேராமலும், உணவு சீக்கிரம் செரித்தலுமாகிறது. அதனால் காலை எழுந்தவுடன் டீ, காபிக்கு பதில் சூட்டான தண்ணீரை அருந்தலாம். இரவு தூங்கும் முன்பும் செய்து வரலாம். இதனால் கொழுப்புகள் சேர்ந்து மேலும் உடல் எடை கூடாமல் இருக்கும்.


சாலட் சாப்பிடுகிறீர்களா?
சாலட் சாப்பிட்டா உடல் எடை அதிகமாக்கும் என்றால் உங்களால் நம்பமுடியுமா? ஆமாம். சாலட் நல்லது தான் என்றாலும் அதில் சேர்க்கும் மயோனிஸ், வொயிட் சாஸ், இட்டாலியன் ட்ரெசிங் போன்றவகளை கொழுப்புகள் நிறைந்தது. மேலும் அதில் சேர்க்கப்படும் டாப்பிங்ஸான சீஸ், பேகான் கூட உடல் எடையை அதிகரிக்க கூடியது தான். இவற்றிக்கு பதிலாக ஆலிவ் ஆயில், ஹாங் தயிர், வீனிகர் சேர்த்த சாலட் என்றால் ஆரோக்கியமானது தான்.


சுகர்
நாம் எடுத்துக்கொள்ளும் சாஸ், செயற்கை தனியானிய உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு, பாக்கெட் ஸ்நாக்ஸ் போன்றவகளில் எல்லாம் சர்க்கரை சுவையூட்டிகளாக கலந்தே இருக்கிறது. இந்த சுவையூட்டிகள் எல்லாம் உடலுக்கு தேவையில்லாத கெட்ட கொழுப்புகள் சேர பெரிய அளவில் பங்காற்றுகிறது. அதானல் மேல் சொன்ன உணவுகளை தவிர்த்தால் உடல் எடை குறைவதை விரைவாக காணலாம்.


இரவு உணவு
இரவு உணவில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள வெள்ளை அரிசி உணவுகளுக்கு பதிலாக சப்பாத்தி எடுத்துக்கொள்ளலாம். சாப்பத்தியில் அதிக நார் சத்துக்கள் அதிகம். அரிசி உணவு தவிர்க்க முடியாது என்பவர்கள், வெள்ளை அரிசிக்கு பதிலாக ப்ரவுன் அரிசி சாப்பிடலாம். சப்பாத்தி வேண்டாம் என்பவர்கள் வெஜ் சாலட், ரவா , சூப் போன்றவற்றுடன் இரவு உணவை முடித்துக்கொள்ளலாம்.