போருக்குச் செல்லும் வீரர்கள் சியா விதைகளைச் சாப்பிட்டுவிட்டுச் செல்வார்களாம். சால்வியா என்னும் புதினா குடும்பத்தை சேர்த்த தாவரத்திலிருந்து கிடைக்கும் விதையே சியா விதைகள். மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துகளும் அதிகமாக இருக்கிறது.

சிறந்த உணவு பொருட்களை பட்டியலிட்டால் அதில் சியாவிதைகளுக்கு முக்கிய இடமுண்டு. கடந்த சில வருடமாக தான் பரவலாக சியா விதைகள் பற்றி தெரியவந்தது என்பதற்காக இது எதோ பேன்ஷியான உணவு என்று நினைக்க வேண்டாம். பழங்கால மாயர்களின் அவர்களின் தினசரி உணவுகளில் பிரதான உணவாக சியா விதைகள் இருந்து வந்துள்ளது.


அப்படி என்ன இருக்கிறது சியா விதைகளில்?
வைட்டமின்கள் ஏ, பி, இ மற்றும் டி, சல்பர், இரும்பு, அயோடின், மெக்னீசியம், மாங்கனீசு போன்ற கனிமச் சத்துக்களும் நிறைந்து இருக்கிறது. மிகவும் அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இதனால் சருமத்தில் உள்ள சிதைந்த செல்கள் அதிவேகமாகச் சரி செய்யும் மேலும் நல்ல செல்கள் விரைவில் சேதமடையாமலும் பார்த்துக்கொள்ளும்.


கோழிப்பண்ணைகளில் கோழிகளுக்கு சியா விதைகளை உணவாகக் கொடுத்து வந்தப்போது ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த முட்டைகளையும் ஒமேகா-3 நிறைந்த இறைச்சியையும் பெற முடிந்தது என பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.


உடல் எடை குறைக்க உதவுமா?
சியா விதைகளில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால், இதை சாப்பிட்ட பிறகு மிக விரைவில் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டுவிடும். அதனால் பசி கட்டுப்படுத்தப்படுகிறது.உடல் எடை குறைக்க உதவுகிறது.


சியா விதைகளில் தண்ணீர் ஊற்றினால் ஒரு ஜெல் போன்ற உருவாகும். இதேதான் இதை சாப்பிட்ட பிறகு உடலில் கணிசமான அளவு தண்ணீரை எடுத்துக்கொண்டு நல்ல நுண்ணுயிற்களை குடலில் உருவாக்கும். இதனால் குடலின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் இதய ஆரோக்கியத்துக்கும் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கவும் சியா விதைகள் பயன்படுகின்றன.


பார்ப்பதற்கு சப்ஜா விதைகள் போல் இருக்கும் என்பதால் குழப்பிக்கொள்ளாமல் சியா விதைகள் தேர்வு செய்து தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவும்.