காலை நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. வாழைப்பழம் மற்ற பழங்களை காட்டிலும் மலிவாக கிடைக்க கூடியது. வாழைப்பழத்தில் பல விதமான சத்துக்கள் நிறைந்து உள்ளது. ஆனால் சில பழங்களை சாப்பிடுவதற்குகென்று சில விதிமுறைகள் உள்ளது. குறிப்பாக வாழைப்பழம், வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது.
வாழைப்பழத்தில் பொட்டாஷியம், மக்னீஷியம், இரும்புச்சத்து, ட்ரிப்டோபான், வைட்டமின் பி6, கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் இருக்கிறது. இவை சோர்வு, மன அழுத்தம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஆகியவற்றை சரி செய்யவல்லது. மேலும் வாழைப்பழத்தில் 25%சர்க்கரையும், 89% கலோரிகள் இருக்கிறது. இரும்புசத்தும் உள்ளதால் இரத்த சோகையை சரி செய்கிறது.
இவ்வளவு நன்மை இருந்தாலும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. காரணம், அமிலத்தன்மை அதிகம் இருப்பதால் குடல் இயக்கங்கள் பாதிக்க வைக்கும். ஆனால் வாழைப்பழத்துடன் மற்ற பழங்கள் சேர்த்து ப்ரூட் சால்டாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் வாழைப்பழத்தில் இருக்கும் அமில தன்மை குறையும்.
இப்போது கிடைக்கும் வாழைப்பழம் பெரும்பாலும் இயற்கையானதும் கிடையாது. செயற்கையாக கெமிகல் சேர்த்து விளைக்கப்பட்டது தான். அதனால் வெறும் வயிற்றில் அதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.