பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில், பெண்ணுக்கு ஆதரவாக வந்த வழக்கறிஞரிடம் உல்லாசம் அனுபவித்த இளம் பெண், அதனை வீடியோ எடுத்து
வைத்துக்கொண்டு, வழக்கறிஞரிடமே 20 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் கோலாரில் சீனிவாசப்பூர் டவுனை சேர்ந்த பார்வதி என்ற இளம் பெண், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

அத்துடன், அந்த பகுதியைச் சேர்ந்த பல ஆண்களிடம் பல விதங்களிலும் ஏமாற்றி, அந்த பெண் பணத்தைப் பெற்றிருக்கிறார். ஆனால், பணத்தைக் கொடுத்து ஏமார்ந்த ஆண்கள், அவரிகள்டம் சண்டைக்கு சென்ற நிலையில், அவர் “பாலியல் புகார் அளிப்பேன்” என்பன உள்ளிட்ட, பல்வேறு விதங்களில், தன்னை மிரட்ட வரும் ஆண்களை அவர் திரும்பி மிரட்டி இருக்கிறார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட ஆண்கள் சிலர், அங்குள்ள கோலார் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கோலார் டவுன் போலீசார், “விசாரணைக்குக் காவல் நிலையம் வர வேண்டும்” என்று, அந்த பெண்ணை அழைத்து உள்ளனர்.

அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் நவீன் உடன் காவல் நிலையம் வந்த பார்வதி, போலீசாரின் விசாரணையில் இருந்தும், அந்த வழக்கில் இருந்தும் எப்படியோ தப்பித்துக்கொண்டார்.

இதனையடுத்து, இளம் பெண் பார்வதிக்கும், வழக்கறிஞர் நவீனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கமாக மாறிய நிலையில், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

முக்கியமாக, வழக்கறிஞர் நவீனுக்கும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இளம் பெண் பார்வதி, தான் இருக்கும் வாட்ஸ்ஆப் குழுவில் பகிர்ந்து “எனக்கும், வழக்கறிஞர் நவீனுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்றும்” கூறி வந்திருக்கிறார்.

மேலும், “என்னை திருமணம் செய்துகொண்ட வழக்கறிஞர் நவீன், தற்போது என்னை விட்டு விலகிவிட்டதாகவும்” மீண்டும் அவர் சமூக வலைத்தளங்களில் தகவல்களைப் பரப்பி இருக்கிறார்.

இதனால், “எனக்கு வழக்கறிஞர் நவீன் எனக்கு இழப்பீட்டுத் தொகையாக 20 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்” என்றும், வழக்கறிஞர் நவீனையும் மிரட்டி இருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் நவீன், இது குறித்து அங்குள்ள கோலாரில் செயல்பட்டு வரும் மகளிர் காவல் நிலையத்தில் சம்மந்தப்பட்ட இளம் பெண் பார்வதி மீது புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பார்வதியை அதிரடியாகக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, இளம் பெண் பார்வதியால் இது போன்று பாதிக்கப்பட்ட ஆண்கள் புகார் அளிக்கலாம் என்றும், போலீசார் அறிவித்து உள்ளனர். இதனால், கடந்த காலங்களில் பார்வதியால் பாதிக்கப்பட்ட பல ஆண்களும் புகார் அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் பார்வதியின் செல்போனை பறிமுதல் செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.