“காதலனை மனைவி கட்டிப்பிடித்ததால்” கடும் அதிர்ச்சியடைந்த கணவன், இருவரையும் ஒரே மரத்தில் கட்டிப்போட்டு கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது.
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள சூரத் அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) வசித்து வந்தார். இவருக்கும், பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது.
திருமணத்திற்குப் பிறகு, அந்த இளம் பெண் கணவர் வீட்டில் வந்து வசிக்கத் தொடங்கினார். அவர்கள் இருவரும் தொடக்கத்தில் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்று தெரிகிறது.
இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில், கணவன் சரவணனுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்து உள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே சண்டையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது.
இப்படி, அவர்கள் இருவருக்குள்ளும் தொடர்ந்து சண்டை அதிகமானதால், அவரது மனைவி கணவனிடம் கோபித்துக்கொண்டு, தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று உள்ளார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத கணவன் சரவணன், தனது மனைவியை கண்காணிக்கத் தொடங்கினார்.
இப்படியான சூழ்நிலையில், கடந்த 23 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று, தனது அம்மா வீட்டில் இருந்து வந்த சரவணன் மனைவி, தன்னுடைய காதலனை தன்னை சந்திக்க வருமாறு, அந்த பகுதியில் உள்ள ரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து உள்ளார்.
அதன்படியும், அந்த காதலன் அங்கு வந்திருக்கிறார். அப்போது, அந்த பெண்ணும், அவரது காதலனும் அங்கு சந்தித்துப் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.
இதனைத் தெரிந்துகொண்ட அந்த பெண்ணின் கணவர், அந்த இடத்திற்குச் சென்று மறைந்து நின்றுகொண்டு, தனது மனைவி என்ன செய்கிறாள்? என்ன பேசுகிறாள்?” என்று மறைந்து நின்று பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
அப்போது, அந்த பெண், தனது கணவனின் டார்ச்சர்களை கூறி, தனது காதலனை கட்டிப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த கணவன் சரவணன், மனைவி மற்றும் மனைவியின் காதலன் இருவரையும் பிடித்து அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து, கடுமையாகத் தாக்கி உள்ளார். இதனை, அந்த ஊர் மக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ, அந்த பகுதியைச் சேர்ந்த போலீசாரின் கவனத்திற்கும் சென்றது.
இதனைப் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த போலீசார், அந்த பெண்ணின் காதலனை அழைத்து சரவணன் மீது புகார் தரும் படி கூறினார்கள். அதன்படி, அந்த காதலனும் புகார் அளித்த நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணின் கணவன் சரவணனை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.