இந்தியாவுக்கு தனியாக முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவி உருவாக்கப்படும், இது நமது படைகளை சிறப்பாக செயலாற்ற வைக்கும் என பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டவர் பிபின் ராவத்.
ஜெனரல் பிபின் ராவத் 1958-ம் ஆண்டு மார்ச் 16-ம் நாள் பௌரி, உத்தரகாண்ட்ல் ராஜ்புத் வம்சாவளியில் பிறந்தவர். இவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ மனைவிகள் நலச்சங்கம் தலைமையதிகாரியாக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பிபின் ராவத் பள்ளிப்படிப்பை கேம்ப்ரியன் ஹால் பள்ளியிலும், சிம்லாவில் உள்ள செயின்ட் எட்வர்ட் பள்ளியிலும் படித்தார். அதன் பிறகு தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப்பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ள பிபின்ராவத், சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் எம்.பிலும், மேலாண்மை மற்றும் கணிணி அறிவியலில் பட்டயப்படிப்பையும் பயின்றுள்ளார்.
பிபின் ராவத் 16 டிசம்பர் 1978-ல் 11 கோர்க்கா ரைபிள்ஸின் 5-வது பட்டாலியனில் தனது தந்தையின் அதே பிரிவில் இராணுவ பிரிவில் சேர்ந்தார் . அவர் உயர்மட்டப் போரில் அதிக அனுபவம் பெற்றவர் மற்றும் கிளர்ச்சி-எதிர்ப்பு நடவடிக்கைகளில் பத்து ஆண்டுகள் செலவிட்டவர்.
மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் மேஜராக பணிபுரிந்தார். ஒரு கர்னலாக, அவர் 5-வது பட்டாலியன் 11 கோர்க்கா ரைபிள்ஸ் என்ற தனது பட்டாலியனுக்குக் கட்டளையிடும் பணியை செய்தார். பிரிகேடியர் பதவிக்கு உயர்த்தப்பட்ட அவர், காஷ்மீர் மாநிலம் சோபோரில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸின் 5 பிரிவுகளுக்கு தலைமை தாங்கினார். பின்னர் அங்கு அவருக்கு இரண்டு முறை படைத் தளபதியின் பாராட்டு வழங்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்கும் மேலான அவரது தொழில் வாழ்க்கையில், அவர் பரம் விசிஷ்ட் சேவா பதக்கம், உத்தம் யுத் சேவா பதக்கம், அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், யுத் சேவா பதக்கம், சேனா பதக்கம், விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் COAS பாராட்டு ஆகியவற்றுடன் வீரம் மற்றும் சிறந்த சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது. ராணுவ போர்த்திறன் குறித்த தனது ஆய்வுக்காக, கடந்த 2011-ம் ஆண்டு, மீரட்டிலுள்ள சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் பிபின் ராவத் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
பின்னர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற பிறகு, ராவத் 19-வது காலாட்படை பிரிவின் உரி தளபதியாக பொறுப்பேற்றார். இந்தியன் மிலிட்டரி அகாடமியில் டேராடூன் ராணுவ நடவடிக்கை இயக்குநரகத்தில் பொதுப் பணியாளர்கள் அதிகாரி தரம் 2, மத்திய இந்தியாவில் மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ சமவெளி காலாட்படைப் பிரிவின் (RAPID) தளவாடப் பணியாளர் அதிகாரி, கர்னல் உள்ளிட்ட பணியாளர் பணிகளையும் அவர் வகித்தார். இராணுவ செயலாளரின் கிளையில் இராணுவ செயலாளர் மற்றும் துணை இராணுவ செயலாளர் மற்றும் ஜூனியர் கட்டளை பிரிவில் மூத்த பயிற்றுவிப்பாளர் பிபின் ராவத் இருந்தார். அவர் கிழக்குக் கட்டளையின் மேஜர் ஜெனரல் ஸ்டாஃப் (MGGS) ஆகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் இந்தியத் தரைப்படையின் 27-வது தலைமைப் படைத்தலைவராக பணியாற்றிய பிபின் ராவதை இவரை இந்தியாவின் முதலாவது பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக இந்தியக் குடியரசுத் தலைவர் 30 டிசம்பர் 2019 அன்று நியமித்தார். இவர் இந்தியப் பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக 1 சனவரி 2020 அன்று பதவி ஏற்றார்.
இந்நிலையில், தற்போது முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி பிபின்ராவத் ராணுவம், விமானப்படை, கடற்படை என மூன்று படைகளுக்கும் ஆலோசகராக, தலைமை தளபதியாக செயல்பட்டுவருகிறார்.