2021 காலகட்டத்திலும், ஊர் பஞ்சாயத்துக் கூட்டங்கள் நடத்தப்பட்டு , தீர்ப்புகள் வழங்கப்படுகிறது.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராஜபுத்திரர்கள் அதிகம் வசிக்கும் கிராமங்கள் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் தான், இதுபோன்ற பஞ்சாயத்துக் கூட்டங்கள் நடத்தப்பட்டுத் தீர்ப்புகள் வழங்கப்படுகிறது.அந்த தீர்ப்புக்கு அந்த கிராமங்களும் கட்டுப்பட்டு வருகிறார்கள்.

இப்படி ஒரு பஞ்சாயத்துத் தேர்தல் தொடர்பான ஒரு ஆலோசனை நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பல ஆண்களும், பெண்களும் டவுசர், டி ஷர்ட், ஜீன்ஸ் போன்ற ஆடைகள் அணிந்து கொண்டிருந்தார்கள். இதைக் கண்டித்த பஞ்சாயத்துத் தலைவர்கள், ‘’ இதுபோன்ற ஆடைகள் எல்லாம் நமது நாட்டு கலாச்சாரத்தைச் சேர்ந்தது இல்லை. மேற்கத்திய ஆடைகள் எல்லாம் நமது நாட்டுக்குச் சரிவராது.


ஆண்கள் என்றால் பேண்ட், குர்தா, தோத்தி போன்ற ஆடைகள் தான் அணிய வேண்டும். பெண்கள் சேலை, சுடிதார், காக்ரா போன்ற ஆடைகளைத் தான் அணிய வேண்டும். இந்த தீர்பை மீறி யாராவது மேற்கத்திய ஆடைகளை அணிந்தால், அவர்களுக்குப் பஞ்சாயத்துச் சார்பில் தண்டனை வழங்கப்படும்” என்றுள்ளனர்.