“இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பானது ஏற்ற, இறக்கங்களாக இருப்பதால், அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று, மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் அனுப்பி அறிவறுத்தி உள்ளது.
கொரோனா என்னும் கொடிய வைரசானது, கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் இருந்து மற்ற உலக நாடுகளுக்குத் தொற்றாக பரவத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோயானது, முதல் அலையை கடந்து, 2 வது அலையும் வந்து, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் 3 வது அலையும் கடந்திருக்கிறது.
இவற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ், தற்போது தான் மெல்ல இயல்பு நிலை திரும்பியிருக்கிறது.
ஆனால், இந்தியாவைத் தவிர்த்து சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் கொரோனா 4 வது அலையே வந்துவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், சீனாவின் கிழக்கு கடற்கரை உள்ளிட்ட அந்நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் கொரோனா தொற்று தற்போது மீண்டும் பரவி வருகிறது. சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா தொற்று பரவியதை அடுத்து, அங்கு ஊரடங்கு விதிகள் மீண்டும் மிக கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அத்துடன், பல ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா மீண்டும் பரவிக்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது என்றும், கூறப்படுகிறது.
இந்த சூழலில் தான், இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது சற்று குறைந்து காணப்பட்டாது. அத்துடன், தமிழகத்தில் இந்த கொரோனா பாதிப்பானது 100 க்கும் குறைவான பாதிப்பாகவே பதிவாகி வருகிறது.
என்றாலும், இந்தியாவில் கொரோனா வைரசானது நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதன் படி, கடந்த மாதம் லட்சக்கணக்கில் இருந்த தினசரி கொரோனா பாதிப்பானது, தற்போது வெகுவாக குறைந்து இருக்கிறது என்றே கூறலாம்.
மேலும், இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா அலை, 2 அலை என்று வேகமாக பரவிய நிலையில், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் பெரும் அளவில் உயிரிழந்தனர்.
அதன் தொடர்ச்சியாகவே, கொரோனா 3 ஆம் அலையில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள மத்திய - மாநில அரசுகள் துரிதமாக செயல்பட்ட நிலையில், அப்போது குறைந்த அளவிலான பாதிப்பே காணப்பட்டது.
என்றாலும், “கொரோனா 4 ஆம் அலையானது வரும் ஜூன் மாதம் இந்தியாவை தாக்கக்கூடும்” என்றே, மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
அத்துடன், “நாடு முழுவதும் உள்ள தொடர்ந்து மக்கள் முக கவசம் அணிந்து, தனி மனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இவற்றுடன், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனா பாதிப்பிலிருந்து பொது மக்களை முழுமையாக மீட்டெடுக்க முடியும்” என்றும், மருத்துவ வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், “இந்தியாவை சுற்றி உள்ள தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு சற்று பரவ தொடங்கி உள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்” என்று, அனைத்து மாநிலங்களும் மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது தொடர்பான கடிதத்தை மத்திய சுகாதார அமைச்சகம் செயலாளர் ராஜேஷ் பூஷன், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின், அனைத்து கூடுதல் தலைமைச் செயலர்கள், முதன்மைச் செயலர்கள், சுகாதார செயலர்களுக்கு அனுப்பி வதை்து உள்ளார்.
அந்த கடிதத்தில், “கொரோனா டெஸ்ட், ட்ராக், ட்ரீட், தடுப்பூசி ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்கிற 5 உத்திகளை குறிப்பிட்டு, அவற்றை அனைவரும் உடனே பின்பற்ற வேண்டும் என்றும், அறிவுத்தி உள்ளார். இதனால், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.