வேகமாக வந்த ரயில் முன்பு தற்கொலை முயற்சியாக திடீரென்று இளைஞன் ஒருவன் பாய்ந்து குதித்த நிலையில், கடைசி வினாடியில் அதிகாரி ஒருவர் ஓடோடிச் சென்று வேக வேகமாக காப்பாற்றிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இருக்கும் விட்டல் வாடி ரயில் நிலையமானது, நேற்றைய தினம் பெரும் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது.
அப்போது, அந்த ரயில்வே நடை மேடையில், பல பயணிகளும் வருவதும், போவதுமாக பரபரப்பாக காணப்பட்டனர்.
அத்துடன், அந்த உதல்வாடி ரயில் நிலையத்தில் காவல் அதிகாரி ரிஷிகேஷ்மான் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அந்த நேரம் பார்த்து, அந்த ரயில்வே டிராக்கில் அதிவேகமாக ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்துக்கொண்டிருந்தது.
அதுவும், மதுரை விரைவு ரயில் வந்து கொண்டிருந்து உள்ளது. அப்போது, அங்குள்ள நடைமேடையில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவன், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன், திடீரென அந்த எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்துக்கொண்டிருக்கும் தண்டவாளத்தில் குதித்து அந்த ரயில் முன்பு பரிதாபத்தோடு நின்றுக்கொண்டிருந்தான்.
அப்போது, அங்குள்ளவர்கள் அனைவரும் பெரும் கூச்சலிட்ட நிலையில், அந்த நடைமேடையில் ரயில் ஒன்று அதிவேகமாக இளைஞரை நெருங்கி வருவதை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் அதிகாரி ரிஷிகேஷ்மான், சட்டென்று கண் இமைக்கும் நேரத்தில் அங்கு ஓடிச் சென்று அந்த தண்டவாளத்தில் குதித்து, தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞனை ரயில் வரும் முன்பு அந்த கடைசி வினாடியில், அவரை பத்திராமாக அந்த தண்டவாளத்துக்கு வெளியே அப்புறப்படுத்தி அதிரடியாக காப்பாற்றி உள்ளார்.
அத்துடன், போலீஸ் அதிகாரி அந்த இளைஞரை காப்பாற்றிய அடுத்த நொடியே அதிவேகமாக வந்த அந்த ரயில், அவர்களை கடந்து அதே வேகத்துடன் சென்று உள்ளது.
இப்படி, நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சிகள் அனைத்தும், அந்த ரயில் நிலையத்தில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
இதனையடுத்து, தனது உயிரை பணயம் வைத்து இளைஞரை காப்பாற்றிய அந்த ரயில்வே போலீசார் ரிஷிகேஷ்மானை சக உயர் அதிகாரிகளும், பொது மக்களுக்கும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக, தற்கொலை முயற்சியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட இளைஞரிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அந்த இளைஞனின் பெற்றோரை நேரில் வரவழைத்த ரயில்வே போலீசார், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அந்த இளைஞனுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி பிறகு, அவரது பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி, தற்போது பெரும் வைரலாகி வருகிறது.