கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி துறந்த நேரத்தில், பிரியங்கா காந்தியை நூலாசிரியர்களான பிரதீப் சிப்பர், ஹர்ஷ் ஷா பேட்டி கண்டு இந்த புத்தகத்தில் இடம் பெறச்செய்திருக்கிறார்கள்.அந்த பேட்டியில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் யாரும் (காந்தி குடும்பத்தில் இருந்து) தலைவராக இருக்கக்கூடாது என்று அவர் (ராகுல் காந்தி) கூறி இருக்கிறார். நான் இதில் அவருடன் முழுமையாக உடன்படுகிறேன். கட்சி தனக்கான சொந்த பாதையை கண்டறிய வேண்டும் என கூறி உள்ளார்.
2019 மே மாதம் மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து ராகுல் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இதுகுறித்து காங்கிரஸ்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா செய்துள்ள ட்விட்டில் இன்றைய சூழல், மோடி- அமித்ஷா ஆகியோரால் இந்தியாவின் அரசியல் மீதான கொடூரமான தாக்குதலை எதிர்த்து அச்சமின்றி போராட வேண்டும்.
"மோசமான தாக்குதல்கள் இருந்தபோதிலும், ராகுல் காந்தி மோடி அரசாங்கத்துடன் அச்சமின்றி போராடுவதை காங்கிரஸ் தொண்டர்கள் கண்டிருப்பதாகவும், காங்கிரசுக்கும் நாட்டிற்கும் "இந்த அச்சமின்மை" தேவை என்றும் அவர் கூறினார்.
2004 ல் சோனியா காந்தி பிரதமராக மறுத்துவிட்டார், அதே நேரத்தில் ராகுல் காந்தி 2019 ல் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக தைரியம் காட்டினார் என்று மேற்கோள் காட்டி காந்தி குடும்பம் ஒருபோதும் ஆட்சிக்கு வர விரும்பவில்லை என்று காங்கிரஸ் கூறி உள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோஹில் கூறும் போதுஒவ்வொரு தொண்டரும், இளைஞரும் ஒரு படித்த மற்றும் நேர்மையான நபரை விரும்புகிறார்கள், அவர் தனது மனதில் பட்டதை பேசுவதற்கு தைரியம் உள்ளவராக இருக்க வேண்டும்.கொரோனாவைப் பற்றியும், எங்கள் எல்லைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை பற்றியும் கூறியதில் ராகுல்காந்தி சரியாக நிரூபித்துள்ளார். ராகுல் மட்டுமே காங்கிரஸின் தலைமையைப் பெற வேண்டும் என்று நாட்டின் இளைஞர்கள் விரும்புகிறார்கள், இது குறித்து முடிவெடுக்கும் உரிமை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கும் மற்றும் காரிய கமிட்டிக்கும் உள்ளது, என்று அவர் கூறினார்.
இதுவொரு பக்கம் இருந்தாலும், ``பாரதிய ஜனதா கட்சியால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இயலாது" என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
எல்லை விவகாரம், பொருளாதார மந்தநிலை, இடம்பெயர் தொழிலாளர்கள் குறித்து மத்திய அரசுமீது அவ்வபோது கேள்வி எழுப்பிவரும் ராகுல்காந்தி தற்போது வேலைவாய்ப்பு குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக விடியோ வெளியிட்டு பேசிய அவர், ''பாஜக அரசால் இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இயலாது. கொரோனா வைரஸ் தொற்று பரவலால் பேரிழப்புகள் ஏற்படும் என கூறியபோது ஊடங்கள் கேலி செய்தன.
இன்று நான் சொல்கிறேன். இந்தியாவால் அதன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க இயலாது. நீங்கள் இதனை ஒப்புக்கொள்ளவில்லை எனில் 6 - 7 மாதங்கள் காத்திருங்கள்" என்று கூறினார்.
வேலைவாய்ப்பு குறித்து நேற்று (புதன்கிழமை) சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, கடந்த 4 மாதங்களில் மட்டும் 2 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அந்த 2 கோடி குடும்பங்களில் வாழ்க்கை இருளில் மூழ்கியுள்ளது.
பொய்யான செய்திகளையும், வெறுப்புணர்வையும் முகநூலில் பரப்புவதன் மூலம் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார சரிவைமறைக்க இயலாது என்று ராகுல்காந்தி கூறினார்.