பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் கடந்த 2007-ம் ஆண்டு குஜராத் முதல் மந்திரியாக அவர் இருந்த போது துவங்கப்பட்டது.
பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளில் பிரதமர் மோடி பல லட்சக்கணக்கானோர் பின்பற்றி வருகின்றன. அந்த வகையில்,பிரதமர் மோடியின் யூடியூப் சேனலை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் 1 கோடியை தாண்டியுள்ளது. உலக தலைவர்களில் இந்த எண்ணிக்கையை எட்டிய முதல் தலைவர் மோடியே ஆவார்.
மேலும் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா உள்ளார். இவரது யூடியூப் சேனலுக்கு 36 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். மூன்றாவதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மேனுவல் லோபஸ் உள்ளார். இவருக்கு 30.7 லட்சம் பேர் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். இந்திய அளவில் ஒப்பிடும் போது அரசியல் தலைவர்களில் மோடிக்கு அடுத்த இடத்தில் ராகுல் காந்தி உள்ளார். ராகுல் காந்தியின் யூடியூப் பக்கத்தில் 5.25 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் கடந்த 2007-ம் ஆண்டு குஜராத் முதல் மந்திரியாக அவர் இருந்த போது துவங்கப்பட்டது. இந்த பக்கத்தில் அக்ஷய் குமாருக்கு தான் அளித்த பேட்டி மற்றும் இந்தி திரைப்படத்துறையினருடான பிரதமர் மோடியின் கலந்துரையாடல், கொரோனா பரவலை கட்டுப்படுத்துதவற்கான நடைமுறைகள் போன்ற பிரபலமான வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன.