சமூக வலைத்தளங்கள் மூலமாக பழகிய இளம் பெண் ஒருவர், ராணுவ அதிகாரியோடு பாலியல் உறவு கொண்டு, அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிஷா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ஒடிஷா மாநிலத்தில் ஃபிரோசாபாத்தின் சிர்சகாஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் ஆக ராணுவ அதிகாரி ஒருவர் பணியாற்றி வருகிறார்.
இவர், எந்நேரமும் இன்ஸ்டாகிராமில் மூழ்கிக் கிடந்து உள்ளார்.
அப்போது, உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணோடு அடிக்கடி நட்பு கொண்டு பழகி வந்திருக்கிறார்.
பதிலுக்கு அந்த பெண்ணும் அவருடன் அடிக்கடி சாட்டிங் செய்து வந்திருக்கிறார்.
இதனால், அவர்களுக்குள் சபலம் ஏற்பட்டு இருவரும் தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்துகொண்டு உள்ளனர்.
இப்படியான சூழ்நிலையில், அந்த பெண் அந்த ராணுவ அதிகாரியை அங்குள்ள ஒரு ஹோட்டலில் வர வைத்திருக்கிறார்.
அதன் படி, அந்த ராணுவ அதிகாரி வருவதற்கு முன்பே, அந்த பெண் அந்த ஹோட்டலுக்கு முன்கூட்டியே வந்து காத்திருந்து உள்ளார்.
இதனையடுத்து, அந்த ஹோட்டலுக்கு அந்த ராணுவ அதிகாரி வந்ததும், அவருடன் பாலியல் உறவில் உல்லாசமாக இருந்திருக்கிறார்.
அப்போது, அந்த ராணுவ அதிகாரியுடன் உல்லாசமாக இருந்ததை, அந்த பெண் ரகசியமாக வீடியோவாக பதிவு செய்து உள்ளார்.
இதனையடுத்து, ராணுவ அதிகாரிக்கு அந்த ஆபாச வீடியோவை அனுப்பி வைத்து விட்டு, அவரை மிரட்டி பணம் பறிக்க முயன்று உள்ளார்.
குறிப்பாக, அந்த பெண்ணும், அவருடைய தந்தையும் சேர்ந்துகொண்டு, அந்த ராணுவ அதிகாரியிடம் முதலில் 10 லட்சம் ரூபாய் பணம் பறித்து உள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, அந்த ராணுவ அதிகாரிக்கு சொந்தமான அவருடைய சொத்துக்களில் சில பகுதிகளை எழுதிக் கொடுக்க வேண்டும் என்று, அந்த பெண் மிரட்டி இருக்கிறார்.
இதனால், மிரண்டுபோன அந்த ராணுவ அதிகாரி, தன்னுடைய உறவினர் ஒருவரின் உதவியோடு அந்த பெண் பற்றியும், அந்த பெண்ணின் தந்தைப் பற்றியும் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் போது, அந்த பெண்ணின் தந்தை மீது ஏற்கனவே இது போன்று பல மோசடி வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
அந்த வகையில், தற்போது பாதிக்கப்பட்ட ராணுவ அதிகாரி விடுப்பில் இருப்பதைத் தெரிந்துகொண்டு, அந்த பெண், இந்த ராணுவ அதிகாரியிடம் இப்படியாக ஆபாச வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.