இளம் பெண் - இளைஞர் இருவரும் தனக்கு நடந்த முதல் திருமணத்தை மறைத்துக் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் உண்மை தெரிய வந்த நிலையில், காதல் கொலையில் முடிந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக் காதல் கதைகள் தான், கொலையில் முடிந்த கதைகளைக் கடந்த காலங்களில் நிறையக் கேள்விப்பட்டது உண்டு. ஆனால், முதல் திருமணம் ஆன உண்மையை மறைத்துக் காதலித்து வந்தவர்களின் காதல் கூட, கொலையில் முடிந்திருப்பது அதிர்ச்சியைத் தான் ஏற்படுத்தி இருக்கிறது.
ஹரியானா மாநிலத்தில் தான், இந்த காதல் கொலை நடந்திருக்கிறது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ரிடா மஸ்ரூர் சௌத்ரி என்ற இளம் பெண், ஏற்கனவே திருமணம் ஆகி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, முறைப்படி விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார்.
அதே நேரத்தில், ஏற்கனவே திருமணமான ஹபிப் என்ற இளைஞர், தனக்கு ஏற்கனவே திருமணம் ஆன விசயத்தை மறைத்து தனியாக வசித்து வருவதாக தனக்கு அறிமுகம் ஆன புதிய தோழி ரிடா மஸ்ரூர் சௌத்ரியிடம் கூறி இருக்கிறார்.
இதனையடுத்து, இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், இருவரும் நெருங்கிப் பழகி உல்லாச வாழ்க்கை வாழத் தொடங்கினார். குறிப்பாக, ரிடா மஸ்ரூர் சௌத்ரி என்ற இளம் பெண், ஹபிப் என்ற இளைஞரை முழுமையாக நம்பினார். அவரை திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்து, அவரிடம் சேர்ந்து லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அதாவது, தாலி கட்டிக்கொள்ளாமலே, இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் இல்லற வாழ்க்கை நடத்தி வந்தனர்.
ஒரு கட்டத்தின் தன்னுடைய காதலன் ஹபிப், ஏற்கனவே திருமணம் ஆனது ரிடா மஸ்ரூர் சௌத்ரிக்கு தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து தன் காதலனிடம் கேட்டுள்ளார். அப்போது, காதலர்கள் இருவருக்கும் இடையில் கடுமையான அளவில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
அந்த நேரத்தில், ரிடா மஸ்ரூர் சௌத்ரியின் தங்கை டரன்னம் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது, தனக்கு நேர்ந்த இந்த சோக கதையை அவர் தன் தங்கையுடன் பகிர்ந்துகொண்டதாகத் தெரிகிறது. அக்கா - தங்கை இருவரும் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று அக்காவின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அக்காவிற்கு அவரது தங்கை தொடர்ந்து வீடியோ கால் செய்ய முயன்றுள்ளார். ஆனால், மறு முனையில் அவர் போனை எடுக்க வில்லை. அதன் பிறகு, அவருக்கு சாதாரண கால் செய்துள்ளார். அப்போதும், போன் எடுக்கப்படவில்லை. இதனால், தங்கை டரன்னமிற்கு சந்தேகம் வந்துள்ளது. பதற்றம் அடைந்த தங்கை டரன்னம், இது குறித்து தனது பெற்றோருக்குத் தெரிவித்து விட்டு, அவர்களையும் அழைத்துக்கொண்டு, அக்கா வசித்து வந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, அவரது வீடு வெளி பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து, கதவைத் திறந்து தங்கை ரிடா, தன் பெற்றோருடன் ஒரு வித பதற்றத்துடனே வீட்டிற்குள் வந்து பார்த்துள்ளார். அங்கு, ரிடா மஸ்ரூர் சௌத்ரி சடலமாகக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த தங்கை தரன்னம் மற்றும் அவரது போலீசா், அங்கேயே கதறி அழுதனர். பின்னர், இது குறித்து போலீசாருக்கு புகார் அளித்தனர். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார்,
ரிடா மஸ்ரூர் சௌத்ரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில், “ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்த ரிடா மஸ்ரூர் சௌத்ரி, அந்த உண்மையைச் சொல்லி ஹபிப் என்பவரைத் திருமணம் செய்து கொள்வதாக இருந்த நிலையில், ஹபிப் ஏற்கனவே திருமணம் ஆனவர்
என்பதை ரிடாவிடம் இருந்து மறைத்தது, ரிடாவுக்கு தற்போது தான் தெரிய வந்துள்ளது. இதனால், இது குறித்துக் கேட்ட போது தான், ரிடா உடன் ஹபிப் வாக்குவாதம் செய்ததாகவும், அதில் ஏற்பட்ட சண்டையில் ரிடாவை அவர் கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து, தலைமறைவாக இருக்கும் காதலன் ஹபிப்பை, போலீசார் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதனிடையே, காதலர்கள் இருவரும் தனக்கு நடந்த முதல் திருமணத்தை மறைத்துக் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் உண்மை தெரிய வந்த நிலையில், அந்த காதல் கொலையில் முடிந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.