சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கர்நாடக மாநிலத்தில் மராத்தி மொழி பேசுபவர்கள் வசிக்கும் பகுதிகளை ஒன்றிணைத்து ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த கருத்து இரு மாநிலத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலத்தின், எல்லைப் பகுதிகளில் மராத்தி மொழி பேசும் மக்கள் பெருமளவில் இருக்கிறார்கள். இந்த பகுதியை மகாராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. மேலும் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் லக்ஷ்மண் சவாதி, மும்பையை கர்நாடகத்தின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என்று கூறினார்.
அப்படி கேட்டால், கர்நாடகாவில் மாரத்தி மொழி அதிகம் பேசும் பகுதியை தான் மகாரஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்பார்கள். மகாராஷ்டிராவில் உள்ள கன்னட பள்ளிகள், நூலகங்கள் மற்றும் கலாசார அமைப்புகளுக்கு மகாராஷ்டிரா அரசு மானியம் வழங்குகிறது. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் கர்நாடகாவில் நடக்கிறதா?” என்றார்.