ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை வெறும் 40 நிமிட கடும் போராட்டங்களுக்குப் பிறகு ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்டுள்ள சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் துடாப்பூர் கிராமத்தில் நேற்று மாலை அந்த பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதியின் அங்கு வேலை செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது, இந்த கூலி தொழிலாளி தம்பதியரின் ஒன்றரை வயது மகனான சிவம், அங்கு இருக்கும் ஒரு பண்ணை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்து உள்ளார்.

அத்துடன், கூலி தொழிலாளி தம்பதியின் இரவு 8 மணி கடந்த நிலையிலும், அங்கு வேலை செய்து கொண்டு இருந்து உள்ளனர். அப்பாடிய தருத்திணல், அவர்களது 18 மாத குழந்தையான சிவம், அங்கிருந்த 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் எதிர்பாரத விதமாக தவறி விழுந்து உள்ளது.

இதனை கவனித்த அந்த கூலி தொழிலாளி தம்பதியின், அலறித் துடித்த நிலையில், ஓடிச் சென்ற பார்த்தபோது, அந்த 18 மாத குழந்தை அந்த ஆழ் துளை கிணறத்தில் சுமார் 20 அடி முதல் 25 அடி ஆழத்தில் மட்டுமே சிக்கியிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, துளியும் தாமதிக்காத அந்த கூலி தொழிலாளி தம்பதியின், உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் தீயணைப்பு துறையினருக்கும், மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர்.

அதே நேரத்தில், அந்த பகுதியில் உள்ள ராணுவத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக, ராணுவம், மீட்பு படை, போலீசார் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அடுத்த சில நிமிடங்களில் அங்கு விரைந்து உள்ளனர்.

அதன்படி, அகமதாபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர், இந்திய ராணுவம் மற்றும் போலீசார் அனைவரும் உடனடியாக அங்கு மீட்புப் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

அத்துடன், அவர்கள் அனைவரின் மிக கடினமான போராட்டத்தால், வெறும் 40 நிமிடங்களில் அந்த 18 மாத கை குழந்தை சிவனை பத்திரமாக உயிருடன் மீட்டு உள்ளனர்.

இதனையடுத்து, மீட்கப்பட்ட அந்த குழந்தை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, மீட்கப்பட்ட அந்த குழந்தையின் உடல் நிலை சீராக உள்ளதாக, டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதனால், 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிவம் என்ற 18 மாத குழந்தையை வெறும் 40 நிமிடத்தில் பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம் மற்றும் போலீசார் உள்ளிட்ட பிற அதிகாரிகளுக்கு, அந்த மாநில மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வருகின்றனர்.