புதுச்சேரியில் சித்தியுடனான காதலை தட்டிக்கேட்ட சித்தப்பாவை, அண்ணன் மகனும், சொந்த மனைவியும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையைப் பூர்விகமாகக் கொண்ட 32 வயதான கோபிநாத், அவரது மனைவி 25 வயதான கவுசல்யா தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த தம்பதியினர், கடந்த கடந்த ஜனவரி மாதம் பணி நிமிர்த்தமாக புதுவைக்கு குடியேறினர்.
புதுவை முதலியார்பேட்டை சுதானாநகர் ராஜாஜி வீதியில் வசித்து வந்த இந்த தம்பதியுடன், கோபிநாத்தின் உறவினரான 26 வயதான கார்த்திக் என்பவரும் தங்கி வேலை செய்து வந்து உள்ளார். இந்த கார்த்திக், கோபிநாத் மற்றும் அவரது மனைவிக்கு சித்தாப்பா - சித்தி முறையாகும்.
இப்படி கடந்த சில மாதங்களாக அவர்கள் ஒன்றாக வசித்து வேலைக்குச் சென்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபிநாத்தின் வீட்டுக் கதவு திறந்த இருந்த நிலையில், அங்கு வந்த அந்த வீட்டின் உரிமையாளர் விஜயகுமார், வாடகை கேட்டு வீட்டிற்குள் சென்று உள்ளார். அப்போது, அந்த வீட்டினுள் கோபிநாத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதனைப்பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், திடுக்கிட்டு வெளியே ஓடி வந்து, போலீசாருக்க தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வீட்டில் தூக்கில் தொங்கிய கோபிநாத்தின் உடலை கீழே இறக்கிப் பார்த்து உள்ளனர்.
அப்போது, அவரது உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. இதனையடுத்து, அந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உடலை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கோபிநாத்தின் மனைவி கவுசல்யா, அவரது குழந்தை, அவரது வீட்டில் தங்கி இருந்த உறவினர் கார்த்திக் ஆகியோர், மாயமானது தெரிய வந்தது.
அத்துடன், கோபிநாத்தை அடித்து கொலை செய்து விட்டு, அதனை மறைக்கும் வகையில் தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாட உடலைத் தூக்கில் தொங்க விட்டு இருப்பதும் தெரிய வந்தது.
குறிப்பாக, சித்தி முறையான கவுசல்யாவுக்கும், மகன் முறையான கார்த்திக்கிற்கும் கள்ளத் தொடர்பு இருந்திருக்கலாம் என்றும், அது தொடர்பான பிரச்சினையில் கோபிநாத்தை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு விட்டு, அதன் பிறகு, அவர்கள் இருவரும் தப்பிச் சென்று இருக்கலாமா? என்ற, கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தவளக்குப்பத்தில் பதுங்கி இரந்த கவுசல்யா மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் நாள் அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் குற்ற உணர்வில் இருந்த நிலையில், மறுநாள் தான் அவர்கள் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.
கோபிநாத்தின் மனைவி கவுசல்யாவிடம் நடத்திய விசாரணையில், “என் கணவர் கோபிநாத்தும், உறவினர் மகன் கார்த்திக்கும் ஒன்றாக எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்கள். வேலை முடித்துவிட்டு வீடு திரும்பும் இருவரும் வீட்டிலேயே ஒன்றாக அமர்ந்து மது அருந்துவார்கள், போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபடுவார்கள், அந்த தகராறில் ஏதாவது காயம் ஏற்பட்டு இருக்கலாம்” என்றும் கவுசல்யா முதலில் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் கூறும் போது, கவுசல்யாவும் - கார்த்திக்கும் இடையே கள்ளக் காதல் உறவு இருந்ததால், அவர்கள் வீட்டில் இது தொடர்பாக நாள் தோறும் தகராறு நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக கவுசல்யாவிடம் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்த முறை விசாரணையில், “கணவர் கோபிநாத்தை, கள்ளக்காதலன் கார்த்திக் உதவியுடன் அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டதை கவுசல்யா ஒப்புக் கொண்டதாக” கூறப்படுகிறது. இதையடுத்து கவுசல்யா மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள போலீசார், “உறவு முறையில் கோபிநாத், சித்தப்பா என்ற போதும் கோபிநாத்தின் மனைவியான சித்தி முறையுள்ள கவுசல்யாவுடன், கார்த்திக் முறை தவறி கள்ளக் காதலில் ஈடுபட்டு இருந்திருக்கிறார். இந்த கள்ளக் காதல் உறவு பற்றி கோபிநாத்துக்கு தெரிய வந்த நிலையில், அவர் இருவரையும் பலமுறை கண்டித்துள்ளார். எனினும், கண்டிப்பு முடிந்ததும், அதே வீட்டில் இருவரும் ஒன்றாக மது அருந்துவதும் தொடர்ந்துள்ளது. அதுபோலவே, அவர்களது கள்ளக் காதலும் தொடர்ந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் தான், சம்பவத்தன்று போதையின் உச்சத்தில் இருந்த கணவர் கோபிநாத்தை, கார்த்திக்கின் உதவியோடு மனைவி கவுசல்யா அடித்தே கொலை செய்து உள்ளார். கணவர் கோபிநாத் இறந்ததும், அவரின் உடலைத் தூக்கில் தொங்க விட்டு விட்டு, கணவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளதாகவும்” போலீசார் தெரிவித்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.