டெல்லி நீதிமன்றத்தில் வளாகத்தில் சுமார் 40 நிமிடங்கள் நடந்த துப்பாக்கி சூட்டில் பிரபல தாதா உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் வட மாநிலங்களான அரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல தாதா ஜிதேந்தர் கோகி, அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
இப்படியான சூழ்நிலையில் தான், விசாரணைக்காக பிரபல தாதா ஜிதேந்தர் கோகி உள்ளிட்டோர் இன்று டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவறதக்கா இன்று கொண்டுவரப்பட்டனர்.
அப்போது, அங்கள்ள அறை எண் 207 ல் அவர்கள் சென்ற போது, அவர்களை நோக்கி வக்கீல் உடையில் இருந்த கோகியின் எதிர்கோஷ்டி ரவுடி கும்பல், திடீரென்று துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுள்ளனர்.
இதனால், அங்கு கூடியிருந்த வழக்கறிஞர்கள், பிற கைதிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் 4 புறதும் சிதறி ஓடினார்கள். அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசார், எதிர் கோஷ்டியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
கிட்டதட்ட அங்கு சுமார் 40 நிமிடங்கள் போலீசாருக்கும், ரவுடி கும்பலுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில், பிரபல தாதா ஜிதேந்தர் கோகி உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பலியானார்கள். இதனால், நீதிமன்ற வளாகமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
அத்துடன், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் டெல்லியில், பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அங்கு நிலவும் பதற்றத்தைத் தனிக்கும் வகையில், அங்கு ஏராளமான போலீசார் தற்போது குவிக்கப்பட்டுள்ளனர்.