ஒரே நேரத்தில் 2 இளம் பெண்களை விவசாயி ஒருவர் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் தான் இப்படி ஒரு திருமணம் நடைபெற்றுப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சட்டீஸ்கர் மாநிலம் ஜகதல்பூரை சேர்ந்த 24 வயதான சந்து மவுரியா என்ற இளைஞர், அந்த பகுதியில் விவசாயாக வேலை பார்த்து வருகிறார்.
விவசாயி சந்து மவுரியா, அங்குள்ள தோகபால் எனும் பகுதியில் மின்சார கம்பங்கள் நடும் பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணான சுந்தரி என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சுந்தரியிடம் இளைஞர் சந்து மவுரியா காதல் வசப்பட்டுள்ளார்.
இதில், இருவரும் ஒருவரை ஒருவரை காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில், காதலர்கள் இருவரும் காதல் திருமணம் செய்யத் திட்டமிருந்தனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், இளைஞர் சந்து மவுரியாவின் வாழ்க்கையில் ஹசீனா பகேல் என்ற இளம் பெண்ணும் நுழைந்திருக்கிறார்.
அதாவது, சந்து மவுர்யாவின் கிராமமான திக்ரலோஹங்காவிற்கு ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்ள ஹசீனா என்ற இளம் பெண் வந்துள்ளார். அப்போது, ஹசீனாவுக்கு, சந்து மவுர்யா மீது காதல் வசப்பட்டுள்ளார். இதனால், இளைஞர் சந்து மவுர்யா, ஹசீனாவையும் காதலிக்கத் தொடங்கினார்.
முக்கியமாக, இளம் பெண் ஹசீனா, தன்னுடைய காதலை சந்து மவுர்யாவிடம் வெளிப்படுத்திய போது, அவர் இளம் பெண் சுந்தரியுடனான தன்னுடைய காதலை மறைக்காமல் இளம் பெண் ஹசீனாவிடம் கூறியிருக்கிறார். இதனை தெரிந்த பிறகும் கூட இளம் பெண் ஹசீனாவுக்கு, சந்து மவுர்யாவை திருமணம்செய்யும் தன்னுடைய ஆசையையும், மீண்டும் அவரிடம் தெரிவித்திருக்கிறார்.
இதனால், விவசாயான சந்து மவுர்யாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இது விசயமாக, சந்து மவுர்யாவும், இளம் பெண் ஹசீனாவும் நீண்ட நேரம் விவாதித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, சந்து மவுர்யாவின் காதலியான சுந்தரியும், ஹசீனா நேரில் சந்தித்து தங்களது காதல் விசயங்கள் குறித்து மிக நிண்ட நேரம் பேசி உள்ளனர். அப்போது, அந்த இரு இளம் பெண்களுக்குமே சந்து மவுர்யாவுடன் சேர்ந்து ஒன்றாக வாழ சம்மதம் தெரிவித்துள்ளனர். இரு பெண்களும் தங்களது முழு சம்மதத்துடன் காதலன் மவுர்யாவின் வீட்டில் திருமணத்துக்கு முன்பே ஒன்றாக சேர்ந்து வாழத் தொடங்கி உள்ளனர்.
காதலன் வீட்டில் மவுர்யாவின் பெற்றோரும், அவரது இரு சகோதரர்களும் இருக்கும் நிலையில், அவர்களுடன் சேர்ந்து இந்த இரு பெண்களும் வசிக்கத் தொடங்கினர்.
அதன் தொடர்ச்சியாக, காதலர்கள் 3 பேரும் சேர்ந்து, ஊர் முறைப்படி கிராமத்தினர் முன்னிலையில் சாஸ்திர சடங்கு, சம்பிரதாயங்களுடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
முக்கியமாக, இந்த திருமணத்தில் இளம் பெண் ஹசீனாவின் குடும்பத்தினர் கலந்து கொண்டதாகவும், முதல் காதலியான சுந்தரியின் குடும்பத்தினர் கலந்துகொள்ளவில்லை என்றும், மாப்பிள்ளை சந்து மவுர்யா கூறியுள்ளார்.
இதனிடையே, காதலர்கள் சந்து மவுர்யா - சுந்தரி - ஹசீனா ஆகியோரின் திருமணம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.