ஒட்டுமொத்த எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகள் மற்றும் தொடர் அமளிகளுக்கு இடையே வாக்காளர் அடையாள அட்டை உடன், வாக்காளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்ப்பட்டுள்ளது, “ஒரு நாடு - ஒரு தேர்தல் வருகிறதா?” என்ற அச்சத்தையும் பீதியையும் எதிர்கட்சிகளிடம் ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் தற்போது நடந்துகொண்டிருக்கும் நிலையில், எதிர் கட்சிகளின் மிக கடுமையான எதிர்ப்புகள் மற்றும் தொடர் அமளிகளுக்கிடையே, வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்காளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மிகவுமு் சர்ச்சைக்குரிய இந்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் அறிமுகம் செய்த போது, நாட்டின் ஒட்டு மொத்த எதிர் கட்சிகளும் மிக கடுமையான கண்டன்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து தொடர்ந்து கடும் அமளியிலும் ஈடுபட்டது.
ஆனாலும், இந்த மசோததா, குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
“இந்த மசோதாவால் பல வாக்காளர்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்டு, அவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள்” என்று, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
குறிப்பாக, “எதற்காக இந்த மசோதா அவசரமாக நிறைவேற்றப்படுகிறது?” என்று, இந்தியாவின் முக்கிய எதிர் கட்சிகளான காங்கிரஸ், திமுக, இடதுசாரிக் கட்சிகள், மஜ்லிஸ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ், சிவா சேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர் காட்சிகளும் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இவற்றுடன், “இந்த மசோதாவை ஒரு நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தி உள்ளன.
இந்த மசோதாவின் படி, “ஒரே நபர், பல தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்வதை வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்காளரின் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் தடுக்கலாம்” என்று, மத்திய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், “ஜனவரி மாதம் முதல் தேதியன்று, 18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள் வாக்காளராக தற்போதைய விதிகளின்படி பதிவு செய்ய முடியம் என்றும், மற்றவர்கள் அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது” என்றும் கூறப்படுகிறது.
“இதனால், வரும் ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியன்று 18 வயது பூர்த்தியானவர்களும் வாக்காளர்களாக பதிவு செய்யலாம் என மசோதா மூலம் மத்திய அரசு திருத்தம் செய்வதாகவும்” அவர் கூறினார்.
மிக முக்கியமாக, “நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள் ஆகியவற்றுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை அமல்படுத்தவும் மத்திய அரசு முயற்சி செய்துகொண்டிருக்கிறது” என்றும், எதிர் கட்சிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளன.
“இது குறித்து சமீபத்தில் பல்வேறு ஆலோசனைகள் மத்திய அரசு, தேர்தல் ஆணையம், மற்றும் மாநில அரசுகள் எனப் பல கட்டங்களில் நடைபெற்றுள்ளது என்றும், இந்த நடவடிக்கைகள் “ஒரு நாடு - ஒரு தேர்தல்” என்கிற குறிக்கோளை நோக்கி மத்திய அரசு செல்கிறதோ என்கிற சந்தேகத்தை எழுப்பி உள்ளது என்றும், எதிர்கட்சிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளன.