மனித முகத்துடன் ஆடுக்கு குட்டி ஒன்று பிறந்துள்ளதால், பொது மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு விநோத சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அசாம் மாநிலம் சாச்சர் மாவட்டம் அருகே இருக்கும் கங்காபூர் பகுதியில் வசித்து வரும் சங்கர் தாஸ் என்பவர், தனது வீட்டில் சில ஆடுகளை வளர்த்து வருகிறார்.
அதில், ஒரு ஆடு மட்டும் நேற்றைய தினம் தனது கன்னை ஈன்றுள்ளது. ஆனால், அந்த ஆடு ஈன்ற கன்றானது, மனித குழந்தையைப் போன்று அந்த குட்டி இருந்திருக்கிறது.
அதாவது, சினையாக இருந்த அந்த ஆடுனாது, வழக்கம் போல் தனது குட்டிகளைப் போன்றே புதிதாக ஆட்டு குட்டிகளையும் போடும் என்று, அதன் உரிமையாளர் சங்கர் தாஸ், எதிர்ப்பார்த்திருந்து காத்திருந்தார்.
ஆனால், அந்த ஆடு அப்படியே மனித உருவத்தை அச்சு பிசகாமல் தனது குட்டியை ஒரு மனித முகத்தைப் போன்றே ஈன்றுள்ளது.
அதுவும், மனிதனின் கண், மூக்கு, வாய் என அனைத்தும் அப்படியே மனித குழந்தைக்கு இருப்பது போலவே இருந்திருக்கின்றன.
குறிப்பாக, அந்த ஆட்டுக் குட்டிக்கு காது, கால் மட்டும் சற்று வித்தியாசமாகவும் இருந்திருக்கிறது.
அதே போல், அந்த ஆட்டுக்குட்டிக்கு இருப்பது போன்று வாலும் இந்தக் குட்டிக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆட்டுக் குட்டியின் நிறமும், உருவமும் வழக்கமான ஆடுகளைப் போன்று கருப்பு நிறத்தில் இல்லாமல், மனித உருவத்திலேயே அதவும் வெள்ளை நிறத்தில் காணப்பட்டு உள்ளது.
இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அதன் உரிமையாளர் சங்கர் தாஸ், இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் கூறிவே, இதனை காண அந்த கிராமமே கூடி உள்ளது.
இப்படியாக, ஊரே திரண்டு வந்து அந்த ஆட்டுக் குட்டியைப் பார்த்த அந்த பகுதி மக்கள் அப்படியே கடும் பீதியில் உரைந்துப் போனார்கள்.
அத்துடன், இந்த மனித வடிவிலான ஆட்டுக்குட்டி பிறந்தவுடன், “ஏதோ அதிசய பிறவி பிறந்துவிட்டதாக” அதன் உரிமையாளர் எண்ணி இருக்கிறார்.
ஆனால், இந்த ஆட்டுக் குட்டி பிறந்து அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்து உள்ளது.
இதனால், உயிரிழந்த அந்த ஆட்டுக் குட்டியை அவர் உடனடியாக குழி தோண்டி புதைத்துவிட்டாதாகவும் கூறப்படுகிறது.
என்றாலும், இந்த மனித உருவ ஆட்டுக் குட்டியின் புகைக்கபடமும், வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகிக்கொண்டு இருக்கிறது.
இதனிடையே, இதே மாதிரியான ஒரு சம்பவம் கடந்த 2014 ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாத்தில் கர்நாடகா மாநிலம் சோலப்பூரில் பிறந்து உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.