குடியரசு தினத்தன்று டெல்லி டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்ததை குறித்து, பல தலைவர்கள் தொடர்ந்து கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.


ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் மற்றும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், “ ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் நடந்த வன்முறை துரதிர்ஷ்டவசமானது. அந்த வன்முறைக்கு காரணமானவர்கள் அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


மேலும் குடியரசு தினத்தன்று என்ன நடந்திருந்தாலும் விவசாயிகளின் இயக்கத்தை நிறுத்த முடியாது. விவசாயிகளுக்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும், ஆனால் அமைதியான முறையில் தான் அது இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.