சமூக வலைத்தளங்களின் மூலமாகப் பழகி 300 க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆபாசப் படங்களை வாங்கியதோடு, அவர்களிடம் பணம் மற்றும் நகைகளைப்
பறித்துக்கொண்டு மிரட்டிய குட்டி மன்மதனை போலீசார் தட்டி தூக்கி உள்ளனர்.
ஆந்திரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ஆந்திரா மாநிலம் கடப்பா தாலுகாவில் உள்ள ஒரு வீட்டில் திருட்டு நடைபெற்று உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த வழக்கில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி அன்று, இளைஞன் ஒருவனை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த இளைஞனிடமிருந்து 30 கிராம் தங்க நகைகள் மற்றும் 1.26 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த இளைஞனிடம் தங்களது பாணியில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி உள்ளனர். அந்த இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளைஞன் மீது ஆந்திரா, தெலங்கானா என 2 மாநிலங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த போலீசார், “யாரா நீ?” என்ற தோரணையில் விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த விசாரணையில், “இந்த இளைஞன், கடப்பா மாவட்டம் புரோதட்டுரைச் சேர்ந்த சென்னுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பிரசன்னகுமார் என்கிற ராஜாரெட்டி” என்பதை கண்டுபிடித்தனர்.
“இந்த இளைஞன், கல்லூரி முதலாம் ஆண்டிலேயே கல்லூரிக்குச் செல்வதை நிறுத்தி விட்டு, மிகவும் உல்லாசமாக ஊர் சுற்றுவதைப் பழக்கமாக்கிக் கொண்டார் என்றும், கடந்த 2017 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் சிறைக்குச் சென்று வந்ததையும் போலீசார்” கண்டுபிடித்தனர்.
குறிப்பாக, அந்த மாநிலத்தில் உள்ள கடப்பா, விஜயவாடா, ஐதராபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் இளம் பெண்கள் மற்றும் நடுத்தர வயது பெண்களுடன் ஃபேஸ்புக், ஷேர்சாட், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூக வலைத்தளத்தின் மூலமாக நட்பை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களிடம் வசியமாகப் பேசி வந்த நிலையில், தனது காதல் வலையில் பல பெண்களையும் வீழ்த்தியிருக்கிறார்.
இதனையடுத்து, அந்த பெண்களுடன் தொடர்ந்து போனில் பேசி அரட்டை அடித்து வந்த அந்த இளைஞன், சம்மந்தப்பட்ட பெண்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களின் நிர்வாண படங்கள், அரை குறையான நிர்வாண படங்கள் மற்றும் ஆடை இல்லாத ஆபாச வீடியோக்களை அனுப்பும் படி கூறி, அதனைச் சேமித்து வைத்துக்கொண்டு, அதன் பிறகு சம்மந்தப்பட்ட பெண்களை பிளாக்மெயில் செய்து பணம் மற்றும் நகைகளைப் பறித்துக்கொண்டு வந்ததும் தெரிய வந்தது.
அத்துடன், பணம் தர மறுக்கும் பெண்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாகவும், அவன் பல பெண்களையும் தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறான்.
இப்படியாக, 200 இளம் பெண்கள் மற்றும் 100 க்கணக்கான திருமணம் ஆன நடுத்தர வயது பெண்கள் என மொத்தம் 300 பெண்களை ஏமாற்றி, மோசடியாகப் பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது.
மிக முக்கியமாக, அப்படி தன் வலையில் வசமாகச் சிக்கும் பல பெண்களையும், அவன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான்.
ஆனால், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் எந்தவித புகாரும் இது வரை அளிக்கவில்லை என்றும், ஆனாலும் இந்த குற்றங்கள் தொடர்பாக அந்த இளைஞனின் செல்போனில் மோசடி செய்யப்பட்ட அனைத்து பெண்களின் படங்கள் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்து, அவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலை போலீசார் தற்போது தயாரித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பல பெண்களும் தங்களது பெயர் பட்டியலில் இடம் பெறக் கூடும் என்ற பீதியிலும் உரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.