ஆந்திராவில் பரவிய மர்ம நோய்க்கான காரணம் என்ன என்று எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் ஆந்திராவை மர்ம நோய் ஒன்று பரவி வந்தது. சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் தாக்கிய இந்த நோயால் ஏராளமானோர் தொடர் வாந்தி, தலைச்சுற்றல், வலிப்பு, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளாகினர்.
இந்த நோய் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்த நிலையில் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மட்டும் இந்த நோய் பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டதால், அதற்கான காரணத்தை கண்டய மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவ குழுவுக்கு பரிந்துரை செய்தது.
அதன்பின் எய்ம்ஸ் மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், நரம்பியல் துறை வல்லுனர்கள், சுகாதாரத்துறையினர் என பலத்துறையினர் ஆந்திராவில் களப்பணியில் ஈடுப்பட்டனர்.
ஆய்வில் எலூர் மக்கள் திடீரென மயங்கி விழுந்ததற்கு, வேளாண் சாகுபடியின்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தே காரணம், ஆர்கனோக்ளோரின் என்ற பூச்சிக்கொல்லி மருந்தே பாதிக்கப்பட்டோரின் உடலில் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த லெட் மற்றும் நிக்கல் போன்ற ரசாயனம் பாதிக்கப்பட்டோரின் இரத்தத்தில் கலந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பூச்சிக்கொல்லி மருந்துகள் பல நாடுகளில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. லெட் மற்றும் நிக்கல் போன்ற ரசாயனம் பாதிக்கப்பட்டோரின் இரத்தத்தில் கலந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் பூச்சிக்கொல்லி மருந்து மனித உடலில் எப்படி உட்புகுந்தது என்ற ஆய்வுகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுபோன்ற விபரீத சம்பவம் நடைபெறாத வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பரிசோதனை மையம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.