இந்தியாவில் 24 மணிநேரத்தில் 63,490 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 71.1% ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட விவரம்:
24 மணிநேரத்தில் 63,490 பேருக்கு கொரோனா இந்தியாவில் 24 மணிநேரத்தில் மொத்தம் 63,490 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,89,692 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 18,62,258. அதாவது இந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் விகிதமானது 7.171% ஆக உள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 944 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 49,980. இந்தியாவில் ஆகஸ்ட் 7-ந் தேதி முதல் நாள் தோறும் 60,000க்கும் குறையாமல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.93% ஆக உள்ளது. ஆக்டிவ் கேஸ்கள் நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,77,444. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இது 26.16%. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது கடந்த 7-ந் தேதியன்று 20 லட்சத்தைத் தாண்டியது.
இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. ஆக்டிவ் கேஸ் மாநிலங்கள் மகாராஷ்டிராவில் தற்போது 1,56,719 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு அடுத்ததாக ஆந்திராவில் 88,138 பேரும் கர்நாடகாவில் 81,284 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 4-ம் இடத்தில் உள்ள தமிழகத்தில் மொத்தம் 54,213 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய அளவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
சர்வதேச அளவில் இந்தியா கொரோனா தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே போல இறப்பு விகிதத்திலும் இந்தியா மற்ற நாடுகளை காட்டிலும் பின்தங்கியுள்ளது. இது சிறந்த அம்சமாகும். அமெரிக்கா 23 நாட்களில் 50,000 இறப்புகளை பதிவு செய்தது. பிரேசில் 95 நாட்கள் இந்த இறப்புகளை பதிவு செய்ய எடுத்துக்கொண்டது. மெக்சிகோ 141 நாட்களை எடுத்துக்கொண்டது. இந்நிலையில், இந்தியா 50,000 இறப்புகளை பதிவு செய்ய 156 நாட்களை எடுத்துக்கொண்டது என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
கொரோனா தொற்று நோய்களின் பாதிப்புகளை தணிப்பதில் இந்தியா சிறந்த முயற்சியை செய்து வருகிறது என்றும், கொரோனா நோயாளிகளுக்கான மீட்பு விகிதம் உலகிலேயே இந்தியாவில் உயர்ந்தும் - இறப்பு விகிதம் மிகவும் குறைந்தும் வருவதாகவும் மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருந்தார். 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 50 சதவீதம் மீட்பு விகிதத்தை விட அதிகமாக பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரதுறை தெரிவித்தது.
தற்போது நாட்டின் இறப்பு விகிதம் (CFR) 1.94 சதவீதமாக குறைந்துள்ளது. நோய் பாதிப்புகளை குறைக்க தொடர்ந்து நடத்தப்படும் கணக்கெடுப்பு, பரிசோதனை, அணுகுமுறை அடிப்படையிலான மருத்துவ பரிசோதனைகள், வீட்டு தனிமை ஆகியவற்றின் மூலமாகவும் கொரோனா மீட்பு விகிதம் உயர்ந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆகஸ்ட் 14 வரை இந்தியாவில் 2,85,63,095 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. இவற்றில் 8,68,679 மாதிரிகள் ஆக.14 - ம் தேதியன்று பரிசோதிக்கப்பட்டவை. இது ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இந்த மாத இறுதிக்குள் ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் மக்களை சோதிக்க முடியும் என்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாக சொல்லப்படுகிறது.