“சொந்த செலவில் கோயிலை புனரமைத்து தருவதாக” கூறி, பொது மக்களிடம் பணம் வசூல் செய்து 34 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் வங்கி வணக்கில் வெறும் 3 லட்சம் ரூபாய் மட்டுமே உள்ளதால், அவரை 3 நாள் காவலில் எடுத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.

அதாவது, சென்னை ஆவடியில் உள்ள சாபித் தெருவைச் சேர்ந்த கார்த்திக் கோபிநாத் என்ற இளைஞர், பாஜகவின் தீவிர ஆதரவாளராக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

அத்துடன், பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத், யூ டியூபராகவும் வலம் வந்துக்கொண்டிருந்தார்.

இப்படியான நிலையில் தான், இவர் “பெரம்பலூரில் உள்ள சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலை, தனது சொந்த செலவில் புனரமைத்து தருவதாக” அனுமதி பெற்று, பொது மக்களிடம் பல லட்சம் ரூபாய் வசூலித்து உள்ளார்.

இப்படியாக, கோயில் பெயரைச் சொல்லி பொது மக்களிடம் பல லட்சங்கள் பணம் வசூலித்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், “கோயிலை புனரமைத்து தருவதாக” கூறி, வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் அளவிற்கு பணம் வசூலித்து, அந்த பணத்தை தனது சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொண்டார் என்றும், புகார்கள் கிளம்பின.

இதனையடுத்து, இந்த குற்றச்சாட்டுக்கள் காரணமாக பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத், நேற்றைய தினம் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கார்த்திக் கோபிநாத் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து, பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்தின் சொந்த வங்கிக் கணக்கிலும் 6 லட்சம் ரூபாய் வசூலித்ததாகவும், இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் வங்கிக் கணக்கில் தற்போது வெறும் 3 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதால், “வசூல் செய்த பணம் எங்கே?” என்று, போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க தற்போது திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன், “வெளி நாடுகளில் இருந்து யார் யாரிடம் பணம் வசூல் வேட்டை நடத்தப்பட்டது? என்பது குறித்தும் விசாரணை நடத்த, சென்னை ஆவடி குற்றப் பிரிவு போலீசார் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவற்றுடன், இவரது 2 தனி வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட அனைத்து கணக்குகளையும் முடக்கி, தீவிரமாக விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முக்கியமாக, “அனுமதி பெறாத மிலாப் என்ற செயலி மூலமாக நன்கொடை வசூலித்த பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் மீது கோயில் நிர்வாகம் புகார்” அளித்துள்ளதால், அவர் மீதான வழக்கில் மேலும் சில முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனினும், தன்னை விடுவிக்ககோரி, கார்த்திக் கோபிநாத் தாக்கல் செய்து உள்ள ஜாமீன் மனுவானது, நாளைய தினம் விசாரணைக்கு வர இருக்கிறது.

இதனிடையே, பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அம்மன் கோயில் பெயரில், பொது மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக நேற்று யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்ட விவகாரம், பொது மக்கள் மற்றும் பாஜகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.