விருதுநகர் பாலியல் பலாத்கார வழக்கில் புகார் கூறிய இளம் பெண் தான், எங்களை தவறாக வழி நடத்தினார்” என்று, ஜாமீனில் வெளியே வந்துள்ள சிறுவன், பாதிக்கப்பட்ட இளம் பெண் மீதே வழக்கை திருப்பி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் பெண் பாலியல் பலாத்கார வழக்கு, தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து, அடுத்தடுத்த திருப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, விருதுநகர் மேலத் தெருவை சேர்ந்த 27 வயதான ஹரிஹரன் என்ற இளைஞர், திருமணம் ஆன நிலையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர், அங்குள்ள ஒரு தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த 22 வயது இளம் பெண்ணை, 27 வயதான திருமணம் ஆன ஹரிஹரன், “காதலிப்பதாக” கூறி, அந்த இளம் பெண்ணிடம் நெருங்கி பழகி உள்ளார்.
இதனையடுத்து, அந்த இளம் பெண்ணை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று “திருமணம் செய்துகொள்வதாக” ஆசை ஆசையான வார்த்தைகள கூறி, அவர் உல்லாசம் அனுமபவித்து இருக்கிறார்.
முக்கியமாக, அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை அந்த நபர், தனது செல்போனில் வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, ஹரிஹரன் தனது நண்பன் 37 வது வயதான மாடசாமியிடம் அந்த வீடியோவை காட்டி உள்ளார்.
இதனைப் பார்த்து சபலப்பட்ட மாடசாமி, அந்த வீடியோவை தன்னுடைய செல்போனில் பதிவு செய்துகொண்டு, அந்த பெண்ணிடம் “இந்த வீடியோவை உன் பெற்றோரிடம் காட்டி விடுவேன்” என்று, மிட்டியே, அந்த இளம் பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
இதனையடுத்து, அந்த வீடியோவை அவர் தனது மற்ற நண்பர்களுக்கும் அனுப்பி வைத்த நிலையில், இதனைப் பார்த்த அவரது நண்பர்களான 22 வயதான பிரவீன், 24 வயதான ஜூனத் அகமது உள்ளிட்ட மேலும் 4 பள்ளி மாணவர்கள் அந்த வீடியோவை பார்த்து, இந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
அதன் பிறகு, அந்த பெண்ணிடம் “உனது வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோம்” என்று, அவர்கள் அனைவரும் அந்த இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
இப்படியாக, இந்த கும்பல் தொடர்ச்சியாக தொடர்ந்து 6 மாத காலமாக, அந்த இளம் பெண்ணை கடுமையாக டார்ச்சர் செய்து வந்ததுடன், தொடர்ந்து பாலியல் பலாத்காரமும் செய்து வந்திருக்கிறது. இதனால், கடும் விரக்தியடைந்த அந்த இளம் பெண், 181 இலவச தொலைபேசி எண்ணில் புகார் கூறி உள்ளார்.
இது குறித்து விருதுநகர் ரூரல் போலீசார் விசாரணை செய்த நிலையில், “ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது உள்ளிட்ட மற்ற 4 பள்ளி மாணவர்கள்” இந்த இளம் பெண்ணை தொடர்ச்சியாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சம்மந்தப்பட்ட அந்த 8 பேர் கொண்ட கும்பலையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், இந்த சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்பபடுத்தி உள்ளது.
இந்த வழக்கு, சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி போலீசார், இந்த வழக்கில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் குடோனில் இருந்து போதை மருந்துகள் - ஊசிகளை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தான், இந்த வழக்கில் ஹரிஹரன், பிரவீன், மாடசாமி, ஜுனத் அகமது ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த வழக்கில் மேலும் 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இதில், இந்த 4 சிறுவர்களும், விருதுநகர் சிறார் நீதிமன்ற குழுவால் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தான், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 4 சிறுவர்களில், 15 வயது சிறுவன் ஒருவன், போக்சோ நீதிமன்றத்திற்கும் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள ஒரு மனுவில், “எங்கள் தெருவில் குடியிருக்கும் ஹரிகரன் மூலம் இச்சம்பவத்தில் தொடர்புடைய இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது என்றும், ஆனால் எங்கள் 4 பேரையும் அந்தப் பெண் வெவ்வேறு நாட்களில் வீடு மற்றும் மருந்து கிட்டங்கிக்கு வர சொன்னார்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.
“அப்போது அவரது செல்போனில் இருந்த ஆபாச படங்களை காட்டினார் என்றும், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 5 மாதங்கள் தொடர்ந்து அவர் எங்களை தவறாக வழி நடத்தினார்” என்றும், அந்த சிறுவன் பாதிக்கப்பட்ட இளம் பெண் மீதே பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளான்.
அத்துடன், “இது தொடர்பாக வெளியே தெரிவித்தால், உங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று எங்களை மிரட்டினார் என்றும், இதுதொடர்பாக எங்களை விசாரித்த போலீசாரிடம் தெரிவித்தோம் என்றும், அந்தப் பெண்ணின் செல்போனை ஆய்வு செய்யுமாறு போலீஸ் அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளேன்” என்றும், அந்த சிறுவன் கூறியுள்ளான்.
குறிப்பாக, “இது குறித்து, சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்தும் அவர்களும் பிரச்சினை பெரிதாகி விட்டதால், இது பற்றி ஒன்றும் செய்ய முடியாது என்றும், எங்களை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்” என்றும், அந்த சிறுவன் குறிப்பிட்டு உள்ளான்.
“போலீசாரின் இந்த நடவடிக்கைகளால் நாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானோம் என்றும், இதனால் எங்களை தவறாக வழி நடத்திய அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அந்த சிறுவன், தனது மனுவில் வலியுறுத்தி உள்ளான்.
குறிப்பாக, “அந்த பெண் கடந்த ஓராண்டுக்கு மேலாக யார், யாரிடம் எல்லாம் செல்போனில் பேசியுள்ளார் என்பதை அறிய அவரது செல்போனை ஆய்வு செய்தால், உண்மை தெரிய வரும்” என்றும், தனது மனுவில் அந்த சிறுவன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.