“இந்து பெண்களுக்கு தொல்லை கொடுத்தால், இஸ்லாமிய பெண்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்வோம்” என்று, சாமியார் ஒருவர் பகிரங்கமான மிரட்டல் விடுத்துள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் குறிப்பிட்ட சில வட மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது போன்ற ஒரு பிம்பத்தை, வட மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் அவ்வப்போது சர்ச்சைக்குறிய வகையில் பேசி வருவதன் மூலமாக தெரிய வருகிறது.
அந்த வகையில், இந்திய இறையாண்மையை கேள்விகுறியாக்கும் வகையில், கர்நாடகா மாநிலத்தில் “இஸ்லாமியர்களிடம் பொருள் வாங்காதீர்கள்” என்று, சிலர் திட்டமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருவது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
அத்துடன், கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து வர அதிரடியாக தடை விதிக்கப்பட்ட நிலையில், முன்னதாக “கர்நாடகா மாநிலத்தில் உள்ள மசூதிகளில் தொழுகைக்கு அழைக்கும் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக” சில இந்து அமைப்பினர் குரல் எழுப்பிய நிலையில், “கர்நாடகா மாநிலத்தில் பொது இடங்களில் ஸ்பீக்கர் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, அம்மாநில உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனால், “300 க்கும் மேற்பட்ட வழிபாட்டு தலங்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக” கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் நேற்றைய தினம் கூறினார்.
தற்போது அதன் தொடர்ச்சியாக, இஸ்லாமிய மக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தும் விதமாக, “இந்து பெண்களுக்கு தொல்லை கொடுத்தால், இஸ்லாமிய பெண்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்வோம்” என்று, உத்தரப் பிரதேச மாநிலம் சாமியார் ஒருவர் பகிரங்கமாகவே மிரட்டில் விடுத்து உள்ளார்.
இது தொடர்பாக, உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து மத சாமியார் ஒருவர், ஜீப்பில் இருந்தபடியே பொது மக்கள் இடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அந்த சாமியார் சென்ற ஜீப்பானது அங்குள்ள சீதாபூரில் இருக்கும் மசூதிக்கு அருகில் சென்ற போது, “இந்தப் பகுதியில் எந்த இந்து பெண்களுக்காவது இஸ்லாமிய தொல்லை கொடுத்தால், இஸ்லாமிய பெண்களை நாங்கள் கடத்திச் சென்று பொது வெளியில் வைத்து அவர்களை பாலியல் வன்புணர்வு செய்வோம்” என்று, மிகவும் பகிரங்கமாக மசூதியின் அருகில் நின்று மிரட்டல் விடுத்தார்.
அந்த சாமியார், இப்படியாக இஸ்லாமிய பெண்களுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்ததும், அங்கிருந்த பெரும்பாலான மக்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று, கோஷமிட்டு உள்ளனர்.
இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும், பதற்றமான சூழலும் ஏற்பட்டது.
இதனையடுத்து, அந்த பகுதியைச் சேர்ந்த போலீசார் உடனடியாக அங்கு தலையிட், அங்குள்ள பதற்றமான நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தான், அமைதியாக இருக்கும் இந்தியாவில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய அந்த சாமியார் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, “அல்ட் நியூஸ்” என்ற செய்தி வலைதளத்தின் துணை நிறுவனர் முகமது ஜுபைர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
ஆனால், இது வரை சம்மந்தப்பட்ட சாமியார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அந்த சாமியார் பேசிய வீடியோவை முகமது ஜூபைர் தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
இதன் காரணமாக, இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த சாமியாரின் திமிரான பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், “அந்த சாமியார் பேசிய வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும், சாமியார் பேசியது உண்மை என்று தெரிய வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், சீதாபூர் போலீஸார் தெரிவித்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.