கள்ளக் காதலியுடன் வாழ ஆசைப்பட்ட இளைஞன் ஒருவன், பிளான் பண்ணி இறந்துவிட்டதாக நாடகமாடி, தனது குடும்பத்தை நம்ப வைக்க முயன்றபோது போலீசாரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அடுத்து உள்ள வல்லவன் விளையை சேர்ந்த தில்லைவன பாண்டி என்பவரின் மகன் 25 வயதான பவித்ரன், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில், அந்த பகுதியில் கார் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார்.
இந்த சூழலில் தான், கடந்த 24 ஆம் தேதி தங்கள் குடும்பத்தினரிடம் கடலில் மீன்பிடிக்கச் செல்வதாக கூறிவிட்டு பவித்ரன், தூண்டிலோடு தனது இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். அப்போது, பவித்ரன் தனது செல்போனை வீட்டிலேயே வைத்து விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், மீன்பிடிக்க சென்றதாகக் கூறி விட்டு சென்ற பவித்ரன், அன்று இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பதட்டம் அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடற்கரை சென்று பார்த்த போது, அவரது பைக் செருப்புகளும் மட்டுமே அங்கு இருந்ததை கண்டு மேலும் பதற்றம் அடைந்து உள்ளனர்.
அத்துடன், “மீன்பிடிக்க சென்ற போது, கடல் அலை பவித்ரனை இழுத்துச்சென்று இருக்கலாம்” என்று, சந்தேகத்தின் பேரில் அங்குள்ள உவரி போலீசாரிடம் பவித்ரனின் பெற்றோர் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பவித்ரனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த சூழலில் தான், திசையன்விளை அருகே உள்ள ராமன் குடியை சேர்ந்த சதீஷ், அங்குள்ள கரை சுத்து புதூரில் பழைய இரும்பு கடையில் வேலை செய்து வரும் நிலையில், இவரது மனைவி சாந்தி என்பவர் இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் தான், சாந்தி குழந்தைகளை விட்டுவிட்டு கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மாயமான நிலையில், அவரது செல்போனும் வீட்டிலேயே இருந்தது. இது குறித்து கணவர் சதீஷ் உவரி போலீசாரிடம் புகார் அளித்திருந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சாந்தியையும் தேடி வந்தனர்.
இந்த சூழலில் தான், கடந்த வாரம் தில்லைவன பாண்டி வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், திடீரென மாயமானது. இது குறித்தும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே பவித்ரன் - சாந்தி என்று இருவரும் காணாமல் போன நிலையில், தற்போது பவித்திரனுக்கு சொந்தமான காரும் மாயமானதால், அவர்கள் காரை எடுத்து விட்டு ஊர் சுற்ற சென்றிருக்கலாம்?” என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக விசாரணையை இன்னும் தீவிரப்படுத்திய போலீசார், சாந்தி தனது செல்போனில் சிம் கார்டை மாற்றி மற்றி பலரிடம் பேசுவது போலீசாருக்கு தெரிய வந்தது.
பின்னர், அந்த பெண்ணை ஆய்வு செய்த போலீசார், அந்த செல்போன் எண் உளுந்தூர்பேட்டையை பகுதியை காட்டிக்கொடுத்து உள்ளது.
இதனையடுத்து, போலீசார் உளுந்தூர்பேட்டை விரைந்துச் சென்ற போலீசார், அங்கு பாண்டியின் கார் நின்றதை கண்டுபிடித்தனர். அந்த கார் நின்ற வீட்டில் சென்று போலீசார் பார்த்தபோது, அந்த வீட்டில் பவித்ரன், சாந்தியுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது.
உடனடியாக, பவித்ரன் - சாந்தி ஆகிய இருவரையும் உவரி காவல் நிலையத்திற்கு சொந்த ஊருக்கு அழைத்து வந்த நிலையில். இருவரின் குடும்பத்தினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து, போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, இந்த கள்ளக் காதல் குறித்து, இருவருக்கும் இருவரின் குடும்பத்தினரும் புத்திமதி சொன்ன நிலையில், கள்ளக் காதலியான சாந்தி, “நான் பவித்ரன் உடன் தான் வாழ்வேன்” என்று கூறி, கணவருடன் செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது.
கடைசியாக, வேறு வழியின்றி சாந்தி, தன் குடும்பத்தினருடன் செல்ல சம்மதித்த நிலையில், காதலன் பவித்திரன் மற்றும் சாந்தி ஆகிய இருவருக்கும் போலீசார் அறிவுரை கூறி அவரவர் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, திருமணமாகாத பவித்ரன், தான் இறந்ததாக கூறி நாடகமாடி, 2 குழந்தைகளின் தாயாரை வெளியூருக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உயுள்ளது.