ஒரு இரவில் ஒரு இளம் பெண், இரு வேறு நபர்களால் 2 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜான்வர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்த சிறுமி, தனது 14 வயதிலேயே குடும்ப சூழல் காரணமாக, அவரது பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, 3 ஆண்டுகளுக்குப் பிறகு கணவனின் தங்கையை கொலை செய்த குற்றத்துக்காக, அங்குள்ள ஜோத்பூர் மாண்டோரில் செயல்பட்டு வரும் சீர்திருத்தப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.

இப்படியான சூழலில் தான், கடந்த 20 ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று இரவு ஜான்வர் பகுதியில் உள்ள அந்த சீர்திருத்தப் பள்ளியில் இருந்து, தனது பெற்றோரிடம் வளரும் தனது குழந்தையைப் பார்ப்பதற்காக அந்த பெண், தப்பி சென்றிருக்கிறார்.

அப்போது, ஜோத்பூரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்திற்குச் செல்ல, அந்த சாலையில் காத்திருந்து உள்ளார். அப்போது, 23 வயதான குல்தீப் பிஷ்னோய் என்ற இளைஞன், அந்த பெண் பேருந்து நிலையத்துக்குச் செல்ல உதவுவதாகக் கூறி, தனது வாகனத்தில் லிப்ட் கொடுத்திருக்கிறார்.

ஆனால், அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பலவந்தமாக அவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

இதனையடுத்து, அந்த பெண்ணை அங்குள்ள ஒரு பாலத்தின் அருகில் இறக்கி விட்டிருக்கிறார்.

அந்த நேரத்தில், அந்த பாலத்துக்கு அருகில் என்ன செய்வது என்றுத் தெரியாமல் நின்ற அந்த பெண்ணுக்கு உதவுவதாக கூறி, அந்த வழியாகச் சென்ற ஓட்டுநரான 22 வயதான பாபுராம் ஜாட் என்ற இளைஞர், அந்த பெண்ணுக்கு லிப்ட் கொடுத்து இருக்கிறார்.

ஆனால், அவரும் அந்த பெண்ணை கைலானா ஏரிக்கு அழைத்துச் சென்று, பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

இதனையடுத்து, மறுநாள் 21 ஆம் சனிக் கிழமை காலை 5.30 மணி அளவில், அந்த பெண் அங்குள்ள ஒரு பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு உள்ளனர்.

இதனையடுத்து, வீட்டுக்கு வந்த அந்த பெண், தனக்கு சேர்ந்த பாலியல் பலாத்கார சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், அங்குள்ள மாண்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட குல்தீப் பிஷ்னோய் மற்றும் பாபுராம் ஜாட் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.