ஒரு பெண், கிட்டதட்ட 15 ஆண்களை திருமணம் செய்துகொண்டு முதலிரவு முடிந்ததும், நகைகள் மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடித்து பெரும் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படியான ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த காந்தா பிரசாத் நாத் என்பவர், நீண்ட காலமாகவே கல்யாணம் ஆகாமல் இருந்து உள்ளார்.
இதனால், “தனக்கு நல்ல பெண் வேண்டும்” என்று, தனக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவர் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து, அந்த பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர், “எனக்கு தெரிந்த ஒரு உறவுக்கார பெண் இருப்பதாகவும், அவர் பெயர் பூஜா” என்றும், இவரிடம் கூறியிருக்கிறார்.
அதன் படியே, ஒரு நாள் பூஜாவை பெண் பார்க்க சென்றிருக்கிறார் பிரசாத். பெண் அவருக்கு பிடித்துப் போகவே, தினேஷ் ஏற்பாட்டின் படி பிரசாத் - பூஜா திருமணம் முறைப்படி நடந்து உள்ளது.
இந்த நிலையில் தான், திருமணம் முடிந்து அன்றைய தினம் முதல் இரவும் நடந்து உள்ளது. பின்னர், அடுத்த 8 நாட்கள் அந்த கணவனுடன் வாழ்ந்து வந்த அந்த பெண்ணிற்கு தினேஷின் மனைவி போன் செய்து “எனக்கு உடம்பு சரியில்லை” என்று, கூறியிருக்கிறார்.
இதனால், கணவன் பிரசாத்தும், தனது மனைவியை தினேஷ் வீட்டிற்கு அனுப்பி வைத்து உள்ளார்.
அப்போது, கணவன் வீட்டிலிருந்து சென்ற பூஜா, அதன் பிறகு, அவர் திரும்பி கணவன் வீட்டிற்கு வரவே இல்லை.
இப்படியாக, மனைவி பற்றிய எந்த தகவலும் இல்லாததால், அவர் செல்போன் எண்ணும் உபயோகத்தில் இல்லை என்று வந்து உள்ளது.
இதனால், சந்தேகம் அடைந்த கணவன் பிரசாத், நேராக தினேஷ் வீட்டுக்கு சென்று, “என் மனைவி என்ன ஆனார்?” என்று, பிரசாத் விசாரித்து உள்ளார். ஆனால், அங்கு வீடு பூட்டியிருந்த நிலையில், தினேஷ் நம்பருக்கும் அவர் போன் செய்து விசாரித்து உள்ளார்.
அப்போது, அந்த நம்பரும் ஸ்விட்ச் ஆப் ஆகி இருப்பது தெரிய வந்தது. இந்த சூழலில் தான், பிரசாத்துக்கு சற்று சந்தேகம் வந்து உள்ளது.
இதனால், குழப்பத்துடன் வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்து உள்ளார். அப்போது, அந்த பீரோவில் இருந்த பணம், தங்க நகைகளும் மாயமாகி இருந்தது தெரிய வந்தது.
அப்போதுதான், “தான் ஏமாற்றப்பட்டது” அந்த அப்பாவி கணவன் பிரசாத்திற்கு தெரிய வந்தது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், அங்கள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பூஜாவை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து, அவரை தேடி கண்டுப்படித்து பூஜாவை அதிரடியாக கைது செய்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கூறும்போது, “உண்மையிலேயே அந்த பெண்ணின் பெயர் பூஜா கிடையாது என்றும், அந்த பெண்ணின் உண்மையான பெயர் சீமா கான்” என்றும், கூறியுள்ளனர்.
அதே போல், “பிரசாத்துடன் தற்போது நடந்தது முதல் திருமணம் இல்லை என்றும், இது 15 வது திருமணம்” என்றும், போலீசார் உண்மையை கண்டுப்பிடித்து கூறினர்.
“அந்த பெண்ணின் தொழிலே, ஆண்களை திருமணம் செய்துக்கொண்டு, அவர்களிடம் உள்ள நகைகள் மற்றும்பணத்தை கொள்ளையடித்து விட்டு செல்வதே அவரது நோக்கம் என்றும், இப்படியாக இதுவரை அந்த பெண் 15 பேரை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றி உள்ளார்” என்றும், தெரிவித்து உள்ளனர்.
“அந்த பெண் தனது பெயரை ரியா, ரெனி, சுல்லானா என்று ஒவ்வொரு கணவனிடம் வேறு வேறு பெயர்களுடன் நடாகமாடி உள்ளார் என்றும், திருமணமாகி கணவன் அசந்த நேரம் பார்த்து இந்த பெண் வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகி வந்துவிடுவார்” என்றும், போலீசார் உண்மையை கண்டுப்பிடித்து உள்ளனர்.
குறிப்பாக, கடைசியாக திருமணம் செய்த பிரசாத்திடம் மட்டும் தான், சரியான காரணம் மற்றும் சந்தர்ப்பம் கிடைக்காமல் ஒரு வார காலம் தங்கியிருந்து குடும்பம் நடத்தியதாகவும், இப்படியாக ஒவ்வொரு திருமண மோசடிக்கும் தினேஷ், இந்த பெண்ணுக்கு 30 ஆயிரம் ரூபாய் கமிஷன் தருவார் என்றும், இந்த பணத்திற்கு ஆசைப்பட்டு தான், இந்த பெண் இப்படியான மோசடியான செயலில் இறங்கினார்” என்றும், போலீசார் தெரிவித்தனர்.
மேலும், “இது போல் இன்னும் எத்தனை பேர் அந்த பெண்ணிடம் ஏமார்ந்தனர்?” என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.