முதலிரவுக்கு பயந்து மாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

ஆந்திராவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் பாலநாடு மாவட்டம் மாச்சேர்லா கிராமத்தைச் சேர்ந்த கிரண் குமார், கடந்த 11 ஆம் தேதி குண்டூர் மாவட்டம் தெனாலி நகரம் விஞ்சிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணை, இரு வீட்டார் முறைப்படி திருமணம் செய்திருந்தார்.

திருமணம் முடிந்த அடுத்த சில தினங்களில் பெண் வீட்டார் சார்பில் கடந்த 16 ஆம் தேதி அன்று, முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், கடந்த 12 ஆம் தேதி புதுமணத் தம்பதிகள் இருவரும் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு கிளம்பி உள்ளனர். அன்று மாலை, தெனாலி நகர் பேருந்து நிலையத்தில் வைத்து, புது மாப்பிள்ளை கிரண் குமார் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, “கிரண் குமாரை காணவில்லை என்றும், அவரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டால், தெரியப்படுத்த வேண்டும்” என்றும், பெண் வீட்டார் சார்பில் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், கடந்த 16 ஆம் தேதி கிருஷ்ணா நதியின் குறுக்கே பிரகாசம் தடுப்பணையில் அடையாளம் சிதைந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அந்த உடலை கைப்பற்றிய போலீசார், தீவிரமாக விசாரணையை நடத்தினர்.

இந்த விசாரணையில், கடந்த வாரம் காணவில்லை என புகார் அளித்த அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்து, நேரில் வரவைழைத்தனர்.

அதன்படி, புகார் அளித்தவர்கள் அனைவரும் காவல் நிலையத்துக்கு விரைந்து வந்து அந்த சடலத்தை அடையாளம் கண்ட நிலையில், உயிரிழந்தது “கிரண் குமார்” என்பதை, அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.

இதானல், அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்து, கதறி அழுத நிலையில், “பொருத்தமான ஜோடி என்று ஊர் கூடி வாழ்த்திய ஒரு வாரத்திற்குள்” இப்படி ஒரு மரண செய்தியை கேட்டு, அந்த புதுமணப் பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து போலீசார், இது தொடர்பான விசாரணையை இன்னும் தீவிரப்படுத்திய நிலையில், “உயிரிழந்த புது மாப்பிள்ளை கிரண் குமாருக்கு, முதலிரவு தொடர்பான அச்சங்களும், பீதிகளும் இருந்து வந்ததாக” அவரது தாயார் கூறியிருக்கிறார்.

மேலும், “மண வாழ்க்கை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்த அச்சத்தை போக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன என்றும், ஆனாலும் தற்கொலை என்ற மோசமான நிலைக்கு கிரண் குமார் செல்வான் என்று, நாங்கள் நினைக்கவில்லை” என்றும், அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.