“நித்தியானந்தா எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்”என்று, ஒரு வெளிநாட்டு பெண் சிஷ்யை புகார் அளித்துள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே, சர்ச்சைக்குரிய வகையில் நித்தியானந்தாவின் பெயர் அதிகம் உச்சரிக்கப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் கொரோனா அலைகள் தொடர்ந்து 3 அலைகளாக வீசிய நிலையில், அரசியல் மாற்றங்களும் இங்கு நிகழ்ந்து, ஆட்சி மாற்றமும் நிகழ்ந்து உள்ளது.
இப்படி, வேறு வேறு காரணங்களால் நித்தியானந்தாவின் பெயரை தமிழக மக்கள் சற்று மறந்திருந்தனர்.
அதாவது, நித்தியானந்தாவை சுற்றியும், அவரது ஆசிரமத்திலும் சட்ட விரோதமாகவும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவதும், பின்பு மறைவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த நிலையில் தான், “நித்தியானந்தா எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்” என்று, ஒரு வெளிநாட்டு பெண் சிஷ்யை ஒருவர், தற்போது அளித்திருக்கிறார்.
அதுவும், கர்நாடகாவின் பிடதி போலீசாரிடம் இந்த புகாரை, அந்த பெண் பக்தை அளித்திருக்கிறார்.
பெங்களூரு அருகே உள்ள பிடதியில் ஆசிரமம் அமைத்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கி வந்த சுவாமி நித்தியானந்தா, பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பின்னர், அவர் ஜாமினில் வெளிவந்த நிலையில், உலகின் ஏதோ ஒரு இடத்தில் “கைலாசா” என்று, தானே ஒரு பெயரை சூட்டி, தனி நாடு ஒன்றை ஒருவாக்கி, அங்கு அவர் தலைமறைவாக இருந்தபடி, இணையதளங்களில் அவ்வப்போது அவர் உலா வருவதுடன், பக்தர்களுக்கு அருள் வழங்குவதாக போதனைகளை போதித்து வருகிறார்.
இந்த நிலையில்தான், சாரா லேண்டரி என்ற வெளிநாட்டு பெண்மணி ஒருவர், பெங்களூரில் உள்ள பிடதி போலீசாருக்கு, இ மெயிலில் மூலமாக தற்போது ஒரு புதிய புகாரை அளித்து உள்ளார்.
அந்த வெளிநாட்டு பெண் அளித்துள்ள அந்த பாலியல் புகாரில், “கைலாசா என்ற நாட்டில், நித்தியானந்தாவும் அவரது சீடர்களும் அங்குள்ள பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் தொந்தரவு அளித்து வருகின்றனர்” என்று, பகிரங்கமாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
அதன் படி, “நித்தியானந்தா எனக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார்” என்றும், அந்த வெளிநாட்டு பெண் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
இதனையடுத்து, வெளிநாட்டு பெண்மணியின் இந்த ஆன்லைன் புகாரை பார்த்த கர்நாடகா மாநிலத்தின் பிடதி போலீசார், “இது போன்ற, இ மெயில் புகார்களை ஏற்க முடியாது என்றும், முக்கியமாக, நீங்கள் நித்தியானந்தா மீது புகார் அளிப்பதாக இருந்தால் எந்த வித பயமும் இல்லாமல் இந்தியாவின் ஏதாவது ஒரு காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளியுங்கள்” என்றும், பதில் அனுப்பி உள்ளனர்.
குறிப்பாக, இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெளிநாட்டு பெண் சாரா லேண்ட்ரி, “சுவாமி நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் கைலாசாவில் உள்ள எங்கள் மாணவிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்” என்று, மிக பகிரங்கமாக குற்றச்சாட்டி உள்ளார்.
மேலும், “நித்யானந்தாவின் கைலாசா ஆசிரமம், பெண் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாகவும்வும்” வெளிநாட்டு பெண் சாரா லேண்ட்ரி, பகிரங்கமாகவே குற்றம்சாட்டி உள்ளார்.
இதனால், வெளிநாட்டு பெண் சாரா லேண்ட்ரியின், நித்யானந்தா மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கள், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
இதனால், நித்யானந்தாவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.