சோற்றில் உப்பு சற்று அதிகமாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பஹண்ட்ரா கிழக்கு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவரது கணவர் நிலீஷ் ஷஹ் வயது 46 ஆகும். இந்நிலையில் கணவன் நிலீஷுக்கு நிர்மலா நேற்று காலை உணவு பரிமாறியுள்ளார். சோறு மற்றும் காய்கறி கூட்டு அடங்கிய உணவை நிர்மலா பரிமாறியுள்ளார். நிலீஷ் உணவை சாப்பிடும்போது அதில் உப்பு சற்று அதிகமாக இருந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து அக்கணவன், உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் ஆத்திரமடைந்து, மனைவியான நிலீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவியை நிலீஷ் சரமாரியாக தாக்கியுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்த ஒரு துணியை எடுத்து மனைவியின் கழுத்தை நிலீஷ் நெரித்துள்ளார். இதனால் மூச்சுவிடமுடியாமல் நிர்மலா துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பின்னர் வீட்டை விட்டு நிலீஷ் தப்பியோடியுள்ளார்.
உடனடியாக அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிர்மலாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நிலீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். சோற்றில் உணவு சற்று அதிகமாக இருந்ததால் மனைவியை துணியால் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.