ஈவ்டீசிங் தொல்லையால் திருச்சி திருவெறும்பூரில் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவியின் உறிவனர்கள் பல்வெறு கோரிக்கைகளை முன்வைத்து உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வட மாநிலங்களில் நடைபெறும் பலாத்காரம் மற்றும் ஈவ்டீசிங் தொல்லைகள் தற்போது தமிழகத்தில் தலை தூக்கத் தொடங்கி இருக்கிறது.
அந்த வகையில், திருச்சி திருவெறும்பூர் மலை கோவில் அருகே உள்ள நொச்சி வயல் புதூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த சூழலில் தான், அந்த கல்லூரி மாணவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பின் தொடர்ந்து தொடர்ச்சியாக காதல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.
இப்படியாக தொடர்ச்சியாக, அந்த பெண்ணை காதல் டார்ச்சர் செய்து வந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி அன்று, சம்மந்தப்பட்ட அந்த இளைஞர் குறிப்பிட்ட அந்த மாணவியை ஈவ்டீசிங் செய்தாதாக கூறப்படுகிறது.
அப்போது, கடும் ஆத்திரமடைந்த அந்த மாணவி, தனது செருப்பால் அந்த இளைஞரை அடித்து, திட்டிவிட்டு அங்கிருந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவதால் கடும் கோபம் அடைந்த அந்த இளைஞன், தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து வந்து, அந்த மாணவிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து, அந்த மாணவியை வலுகட்டாயமாக குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால், பயந்து அந்த மாணவி, இது குறித்து தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், கடும் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தயார் திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
அதே நேரத்தில், இந்த சம்வத்தால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வந்த அந்த மாணவி, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் உறிவினர்கள், “மாணவியின் இறப்பிற்கு காரணமாக இளைஞர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி, திருச்சி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் மலை கோவில் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பெரிய அளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், பலரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இது குறித்து சம்ப இடத்திறகு விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி அந்த போராட்டத்தை கலைக்கச் செய்தனர்.
எனினும், அந்த கிராம மக்கள் தற்போது ஒன்று திரண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலையின் அருகே சாமியான பந்தல் போட்டு தொடர்ந்து போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, “சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவியின் இழப்பிற்கு அவர்களது குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்றும், அவர்கள் கோரிக்கையை விடுத்து உள்ளனர்.
குறிப்பாக, “போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை மிகவும் தரக் குறைவாக பேசிய நவல்பட்டு காவல் ஆய்வாளர் வெற்றிவேலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த போராட்டம் காரணமாக, அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.