கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

“இந்தியாவில் சைபர் குற்றங்களானது கடந்த 3 ஆண்டில் 5 மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பதாக” நாடாளுமன்ற குழுவிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது, அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது, இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 400 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளதாக, கடந்த ஆண்டு அறிக்கை ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இது தொடர்பாக, தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விரபங்களை வெளியிட்டு அந்த தகவலை உறுதி செய்தது.

அத்துடன், “இந்தியாவில் சைபர் குற்றங்களானது கடந்த 3 ஆண்டில் 5 மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பதாக”, நாடாளுமன்ற குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, “தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக” காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில், அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று கடந்த வாரம் வெளியாகி, இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான், “கொரோனா ஊரடங்கு காலங்களான கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளை ஒப்பிடும் போது, நடப்பு ஆண்டான 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் சென்னையில் அதிகரித்து உள்ளதாக” அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதாவது, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக கடந்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டது.

இந்தப் பிரிவானது, “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல்கள், குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை போன்றவற்றை தடுப்பதற்கும், உடனுக்குடன் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கும் தொடங்கப்பட்டு, தீவிரமாக செயல்பட்டு” வருகிறது.

அத்துடன், பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களை தடுக்க சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையர் சியமளா தேவி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தியும் வருகிறார்.

என்றாலும், நடப்பு ஆண்டான 2022 ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களான ஜனவரி, பிப்ரவரி ஆகிய இந்த 2 மாதங்களில் மட்டும் 114 வழக்குகள் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

2022 ஆம் ஆண்டு குற்றங்கள்

அந்த வகையில், நடப்பு ஆண்டான 2022 ஆம் ஆண்டில் ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகி இந்த 2 மாதங்களில் மட்டும்

- போக்சோ வழக்குகள் 49

- பாலியல் வன்கொடுமை வழக்குகள் - 2

- பாலியல் சீண்டல் வழக்குகள் - 16

- வரதட்சணை கொடுமை வழக்குகள் - 5

- கணவர் மற்றும் கணவர் குடும்பத்தால் தாக்கப்படுவது தொடர்பான வழக்குகள் - 9

- பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படியான வழக்குகள் - 33
என்று, பல்வேறு பிரிவுகளின் படி, இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த வழக்குகள் கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக பதியப்பட்ட மொத்த வழக்கு பதிவுகளின் சதவிகித்தை விட அதிகம் என்கிற தகவலும் தற்போது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

- நடப்பு ஆண்டான 2022 ஆம் ஆண்டை கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக சென்னையில் மொத்தம் 989 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

- அதே போல், கடந்த 2020 ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக சென்னையில் மொத்தம் 618 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இப்படியாக, கடந்த 2020, 2021 ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு காலங்களை ஒப்பிடும் போது, நடப்பு ஆண்டான 2022 ஆம் ஆண்டில் ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் சென்னையில் கனிசமான அளவு உயர்ந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.