“உலகிலேயே முதல் முறையாக இங்கிலாந்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது” ஒட்டுமொத்த உலக நாடுகளையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
உலகையே அச்சுறுத்திய வரும் கொரோனா என்னும் கொடிய தொற்று நோய், புதிது புதிதாக உருமாறி வருகிறது. அந்த வகையில், கொரோனா என்னும் கொடிய வைரஸ், தற்போது ஒமைக்ரான் வைரசாக உலக முழுவதும் பரவிக்கொண்டு புதிய அச்சத்தை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.
“உருமாற்றம் அடைந்த புதிய 'ஒமிக்ரான்' (B.1.1.529) வகை கொரோனா உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களை விட இந்த புதிய உருமாறிய வைரஸ், அதிபயங்கரமானது” என்று, மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.
முக்கியமாக, “தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் தற்போது அதிகமாகக் காணப்படுவதாக” கூறப்படுகிறது.
அத்துடன், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ், தற்போது இந்தியாவிலும் பரவித் தொடங்கி உள்ளது.
வேகமாகப் பரவும் தன்மையைக் கொண்ட இந்த ஒமிக்ரானை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், இந்தியா உள்ளிட்ட 59 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று தற்போது வரை பரவியிருக்கிறது.
ஒமைக்ரான் வைரஸ், மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால், ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது.
ஆனாலும், தமிழகத்தில் இது வரை யாருக்கும் ஒமைக்ரான் பரவல் கண்டறியப்படவில்லை என்றாலும், தமிழகத்தில் பழைய கட்டுப்பாட்டு முறைகளே தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான், உலகின் பல நாடுகளுக்கும் பரவினாலும் ஒமைக்ரான் இது வரை எந்த வித உயிரிழப்பும் நிகழாமல் இருந்தது என்றும் கூறப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது இங்கிலாந்தில் ஒருவர் ஒமிக்ரான் தொற்றால் தற்போது உயிரிழந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும், ஒமிக்ரான் நோய் தொற்றால் இங்கிலாந்தில் ஒருவர் உயிரிழந்ததை, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.
அதன்படி, உலகின் முதல் ஒமிக்ரான் உயிரிழப்பு இங்கிலாந்தில் பதிவாகியிருப்பது ஒட்டு மொத்த உலக நாடுகளையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன. இதனால், பல உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.