ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலெனியாவுக்கு கொரோனா உறுதியான நிலையில், ட்ரம்ப் தான் கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அவரேவும் அறிவித்திருந்தார்.
அதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதே, மருத்துவமனைக்கு வெளியே கூடியுள்ள தனது ஆதரவாளர்களை பார்த்து வாகன அணிவகுப்பில் இருந்தபடியே கையசைத்தார் ட்ரம்ப். மேலும் வெளியே கூடியுள்ளவர்களைப் பார்க்க 'சர்ப்ரைஸ் விசிட்' ஒன்றை தர இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துவிட்டு, பின் சற்று நேரத்தில் முகக்கவசம் அணிந்தபடி தனது வாகன அணிவகுப்பில் வந்து ஆதரவாளர்களை பார்த்தார்.
இதன்பிறகுதான், ட்ரம்ப் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் இருந்து ட்ரம்ப் அலுவலகத்திற்குள் வந்தார். வால்டர் ரீட் மருத்துவ மையத்தில் வெள்ளை மாளிகைக்கு திரும்பியவுடன், அங்கேயே மாஸ்க்கை கழற்றிவிட்டு போஸ் கொடுத்தார் ட்ரம்ப். மேலும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சல்யூட் அடித்தார். மேலும், ``உங்களது வாழ்க்கையை கொரோனா ஆக்கிரமிக்க அனுமதிக்காதீர்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது நன்றாக இருக்கிறேன்" என்று தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டார் அவர். மேலும், தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் விரைவில் பங்கேற்பேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் தனது உடல் நலம் பற்றி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், ``நான் உங்களின் அன்புக்குரிய அதிபர் பேசுகிறேன்" என்று பேசினார். பின்னர் தனக்கு கொரோனா பாதிக்கப்பட்டது கடவுள் கொடுத்த ஆசிர்வாதம் வரம் என்று கூறியுள்ளார். பல கோடி மக்களுக்காக தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனாவை உலகம் முழுவதும் பரப்பிய சீனா மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார் அவர்.
ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி இருவரும் பாதிப்பு ஏற்பட்டு தொடக்க நாள்களில், வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ட்ரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவர் மட்டுமே ராணுவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே அலுவலக பணிகளை கவனித்து வந்த ட்ரம்ப், 4 நாட்களுக்கு பிறகு கடந்த 5-ந்தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகைக்கு திரும்பிய பிறகு, தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அதிபர் ட்ரம்ப், புளோரிடா மாகாணத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில் “நான் நன்றாக உணர்கிறேன். மிகவும் நன்றாக உணர்கிறேன். தேர்தல் பிரசாரத்தை தொடங்க தயாராக உள்ளேன். அதன்படி இன்று நான் பிரசாரத்தில் ஈடுபடுகிறேன்” என்றார்.
இந்த அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் டொனால்ட் ட்ரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனா். துணை அதிபா் பதவிக்கு, குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய துணை அதிபா் மைக் பென்ஸும் ஜனநாயகக் கட்சி சாா்பில் இந்திய வம்சாவளி எம்.பி. கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனா்.
அமெரிக்காவில் தோ்தலுக்கு முன்னதாக போட்டியாளா்கள் நேரடியாக விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, அதிபா் வேட்பாளா்கள் ட்ரம்ப்புக்கும் ஜோ பிடனுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் ஓஹியோ மாகாணம் கிளீவ்லாண்டில் கடந்த மாதம் 29-ஆம் தேதி நடைபெற்றது.
மிகவும் காரசாரமாக நடைபெற்ற அந்த விவாதத்தின்போது, இருவரும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிப் பேசினா். அதனைத் தொடர்ந்து துணை அதிபா் வேட்பாளா்களான மைக் பென்ஸுக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான விவாதம் யுடா மாகாணம், சால்ட் லேக் சிட்டியில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில் அக்டோபர் 15 ஆம் தேதி புளோரிடாவின் மியாமாயில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையேயான இரண்டாவது அதிபர் தேர்தல் விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் காணொலிக் காட்சி மூலம் ஜோ பிடன் உடன் விவாதிக்க ட்ரம்ப் மறுத்ததைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அக்டோபர் 22ஆம் தேதி டென்னசி மாகாணத்தின் நாஷ்வில்லியில் திட்டமிடப்பட்டிருந்த மூன்றாவது விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.